சென்னை: நாம் அனைவருமே ஒரு குறிப்பிட்ட தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்கிறோம். ஆனால் இவ்வாறு நாம் ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்யும் போது பணவீக்கம் என்ற விஷயத்தை கவனிக்க தவறிவிடுகிறோம்.
உதாரணமாக நீங்கள் 5 கோடி ரூபாய் மொத்த தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் 5 கோடி ரூபாயை கொண்டு இன்றைய தேதியில் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் எனில் அடுத்த 25 ஆண்டு ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு குறைந்து அந்த பொருளின் மதிப்பு அதிகரித்துவிடும். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் பணத்தின் மதிப்பு குறைவதையே பணவீக்கம் என அழைக்கிறோம். இந்தியாவில் பணவீக்கம் சராசரியாக 6 சதவீதம் என சொல்லப்படுகிறது . அதாவது இந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருள் அடுத்த ஆண்டு 106 ரூபாய்க்கு விற்கப்படும்.

எனவே நீண்டகால நோக்கத்தில் முதலீடு செய்பவர்கள் பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். தற்போது 5 கோடியின் மதிப்பு பணவீக்கம் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் எவ்வளவாக குறையும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்..
நமது ஓய்வு காலத்திற்கான சேமிப்பில் பணவீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் தன்னுடைய 25 வயதில் இருந்தே ஓய்வு காலத்திற்காக சேமிக்க தொடங்குகிறார். அவர் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறார் என்றால் அவருக்கு 5 கோடி ரூபாயை சேமிக்க 25 ஆண்டு காலங்கள் இருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கிறது என வைத்து கொள்வோம். தற்போது இருக்கும் 5 கோடி ரூபாய் என்பது 25 ஆண்டுகளுக்குப் பிறகு 1.17 கோடி ரூபாய் என குறைந்திருக்கும்.
அதே வேளையில் 25 வயதாகும் ஒரு நபர் 60 வயதில் 5 கோடி ரூபாய் உடன் ஓய்வு பெற விரும்பினால், அந்த தொகையை சேமிக்க அவருக்கு 35 ஆண்டுகள் இருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கிறது என வைத்து கொள்வோம். தற்போது இருக்கும் 5 கோடி ரூபாய் என்பது 35 ஆண்டுகளுக்குப் பிறகு 51.62 லட்சம் ரூபாய் என குறைந்திருக்கும்.
எனவே ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்பவர்கள் ஆண்டுக்கு 6 சதவிகிதத்திற்கும் மேல் லாபம் தரும் முதலீடுகளை தேர்வு செய்தால் அவர்களுக்கு பணவீக்கத்துக்கு நிகரான சேமிப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடு செய்பவர்கள் இணையதளங்களில் கிடைக்கும் பணவீக்க கால்குலேட்டர்களை பயன்படுத்தி தங்களின் முதலீடு 25 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு லாபம் தர வாய்ப்புள்ளது, அது பணவீக்கத்துக்கு நிகரான லாபம் தருகிறதா என ஆய்வு செய்து முடிவெடுப்பது சிறந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications