மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கும், புதியதாக முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கும் ரேட்டிங்ஸ் என்பது பயனுள்ள ஒன்றாக இருக்கும். அந்த வகையில் கிரிசில் ரேட்டிங் என்பது மியூச்சுவல் பண்டில் அதிக லாபம் தரும் நிறுவனம் மற்றும் பண்டிற்கு வழங்கப்படும் ஸ்டார் ரேட்டிங் ஆகும்.
இதில் 5 மதிப்பெண் பெற்றால் அது உயர்ந்த மதிப்பெண்ணாகவும், 1 மதிப்பெண்கள் என்பது கடைசி மதிப்பெண்ணாகவும் கருதப்படும். எனினும் இது பண்டுகளை வாங்க பரிந்துரை செய்யப்படும் பரிந்துரை அல்ல.
5 பண்டுகள்
அப்படி கிரிசில் ரேட்டிங் கொடுத்த 5 பண்டுகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இதில் குவாண்ட் டேக்ஸ் பிளான், ஹெச்.டி.எஃப்.சி பிளெக்ஸி கேப் பண்ட், நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் பண்ட், குவாண்ட் மிட் கேப் பண்ட், டாடா ஸ்மால் கேப் பண்ட்கள் அடங்கும். இதுபோன்ற ஏராளமான பண்டுகள் 5 ரேட்டிங்கினை கொண்டுள்ளன. எனினும் இன்று நாம் பார்க்கவிருப்பது மேற்கூறிய 5 பண்டுகள் பற்றித் தான்.
என்ன வகையான பண்டுகள்?
இந்த பண்டுகளில் ELSS, பிளெக்ஸி கேப், லார்ஜ் கேப், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பண்குகள் என பல வகையான பண்டுகளும் அடங்கும். இது முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் பண்டுகளில் ஒன்றாகவும் உள்ளன.
உங்கள் தேவை என்ன?
மியூச்சுவல் பண்டுகளை பொறுத்த வரையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன்பு, உங்களது தேவைகளை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப முதலீடு செய்யலாம். குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் எனில் அதற்கேற்ப முதலீடு செய்யலாம். இளைய தலைமுறையினர் ஸ்மால் கேப் பண்டுகளை தேர்வு செய்யலாம். அப்படி இல்லை எனில் லார்ஜ் கேப் பண்டுகளையும் தேர்வு செய்யலாம். நாங்கள் இங்கு கடன் சந்தையை பரிந்துரை செய்யவில்லை, எனினும் முதலீட்டாளர்கள் விருப்பம் இருப்பின் தேர்வு செய்யலாம்.
நல்ல ஏற்றம் காணலாம்
அதேபோல ஒருவர் முதலீடு செய்யும்போது அது நீண்டகால இலக்கு உடையதாக இருக்க வேண்டும். அது லம்ப்சம் தொகையாகவும் இருக்கலாம். எஸ்ஐபி ஆகவும் இருக்கலாம். முந்தைய 5 ஆண்டுகளை காட்டிலும் அடுத்த 5 ஆண்டுகள் மியூச்சுவல் பண்டுகள் நல்ல லாபகரமான ஒன்றாக இருக்கலாம். தொடர்ந்து வட்டி விகிதமும் அதிகரித்து வரும் நிலையில், கடன் பண்டுகளும் கவர்ச்சிகரமான ஒன்றாகத்தான் தற்போதைய சமயத்தில் உள்ளன.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications