பொதுவாக நாம் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளில் தனிநபர் கடன்களை வாங்குகிறோம். திருமணச் செலவு, வாகனம் வாங்குவது என பல காரணங்களுக்காக தனிநபர் கடன்களை வாங்கி பயன்படுத்துகிறோம். எந்த ஒரு பிணையமும் இல்லாமல் ஒரு நபருக்கு வழங்கப்படக்கூடிய கடன்கள் தான் தனிநபர் கடன்.
கடனுக்காக விண்ணப்பம் செய்பவர் தன்னுடைய சொத்தையோ அல்லது தன்னிடம் உள்ள நகைகள் போன்றவற்றையோ அடமானம் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவில் செயல்படும் வங்கிகள் 40 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன்களை வழங்குகின்றன.

மேற்படிப்பு, திருமணம் , பல இடங்களில் உள்ள கடன்களை ஒன்றாக மாற்றுவது, மிகப்பெரிய மருத்துவ செலவு, தொழில் விரிவாக்கம் என பல காரணங்களுக்காக கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்திய வங்கிகள் 10% வட்டி விகிதத்திலேயே இது போன்ற பெரிய தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
தனிநபர் கடன்களுக்கு ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட வட்டி தான், ஃபுளோட்டிங் வட்டி கிடையாது. எனவே நீங்கள் திரும்ப செலுத்தும் தொகையில் எந்த மாற்றமு இருக்காது. இது போல பெரிய தொகைக்கு தனிநபர் கடன்களை வாங்கும் போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வட்டி விகிதத்தை கொண்டுள்ளன. எனவே அதனை ஒப்பிட்டு எந்த வங்கியில் கடன் பெறலாம் என்பதை தேர்வு செய்யலாம்.
செயல்பாட்டு கட்டணங்களையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுப்பது அவசியம். பெரிய தொகைக்கு தனி நபர் கடனை வாங்குவதற்கான தகுதிகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் முதலில் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களது வங்கி அறிக்கையாக இருக்கட்டும் அல்லது அடையாளச் சான்றுகள் முகவரி சான்றுகள் ,வருமானத்தை உறுதி செய்வதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான வங்கிங்கள் தற்போது ஆன்லைன் வாயிலாகவே இந்த நடைமுறைகளை மேற்கொள்கின்றன என்பதால் ஆன்லைன் வாயிலாகவே நீங்கள் விண்ணப்பம் செய்ய முடியும். இதனை அடுத்து வங்கி தரப்பில் உங்களது ஆவணங்கள் சரி பார்க்கப்படும்.
கடனுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் உங்களுக்கு வழங்கப்படக்கூடிய கடன் தொகை எவ்வளவு, வட்டி எவ்வளவு என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் இடம்பெறும். நீங்கள் இதனை ஏற்றுக் கொண்ட பிறகு கடன் தொகையானது உங்களது வங்கி கணக்கில் வந்து சேர்ந்த விடும்.
ஒரு பெரிய தொகையை தனிநபர் கடனாக வாங்கும் போது, அதற்கு ஏற்ப நமது செலவினங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மாதந்தோறும் ஈஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் , அதற்கு ஏற்றபடி பட்ஜெட் போட்டுக் கொள்வது அவசியம்.
தனிநபர் கடன்களை சரியான தேதியில் திரும்ப செலுத்துவது கட்டாயம். இல்லையெனில் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும் அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே சரியாக திட்டமிட்டு கடனை திரும்ப செலுத்துவதால் எதிர்காலத்தில் நீங்கள் எந்த ஒரு தடையும் இன்றி கடன் பெற முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications