சென்னை: ஈபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போனஸ் தொகையாக 50000 வழங்கப்பட உள்ளது. இதற்காக சில நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது இதனை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் ஈபிஎப் கணக்கில் இருக்கும் பணம் போக அரசு சார்பாக 50,000 போனஸ் தொகையாக வழங்கப்படும்.
இந்தியாவில் தொழிலாளர்களின் நிதி எதிர்காலத்தையும் அவர்களின் ஓய்வு காலத்தையும் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் சம்பளம் பெறக்கூடிய தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பாக தருகின்றனர். அதேபோல அவர்கள் வேலை செய்து வரக்கூடிய நிறுவனமும் அவர்கள் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கிறது.

இந்த பணமானது இந்த தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போதும் ஓய்வுக்குப் பிறகும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வேலையில் இருக்கும் போதே கூட ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் ஊழியர்கள் இந்த பணத்தினை எடுத்து பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி இதில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் 8.25% வட்டி தருகிறது. எனவே ஓய்வுபெறும் போது தொழிலாளர்களுக்கு கணிசமான தொகை கையில் கிடைக்கும்.
இதனிடையே ஈபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு 50000 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது. ஒரு நபர் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு ஒரே பிஎஃப் கணக்கில் தன்னுடைய பிஎஃப் பங்களிப்பை செலுத்தி வந்தால் லாயல்டி கம் லைப் திட்டத்தின் (Loyalty-cum-Life Benefit scheme) கீழ் அவருக்கு போனஸ் தொகை வழங்கப்படும். சிபிடிடி சார்பாக இந்த பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசும் ஒப்புதல் தந்துள்ளது.
எனவே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் ஒரே பிஎஃப் கணக்கில் தங்களுடைய பங்களிப்பு தொடர்வதை உறுதி செய்தால் இந்த பணம் நிச்சயமாக கிடைக்கும். இதன்படி 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு 50000 ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும்.
இதில் அடிப்படை சம்பளம் 5 ஆயிரம் ரூபாய் உள்ளவர்களுக்கு 30000 ரூபாயும், அடிப்படை சம்பளம் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு 40000 ரூபாயும், அடிப்படை சம்பளம் 10,000 மேல் இருப்பவர்களுக்கு 50000 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொடர்ந்து ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்துவதையும் தொடர்ச்சியாக இதில் பங்களிப்பை தொடர்வதையும் ஊக்குவிக்கவே அரசு இப்படி ஒரு பரிசினை வழங்குகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications