உலக அளவில் உள்ள அனைத்து மக்களும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அதிகம் யோசிப்பது அவர்களின் ரிட்டையர்மெண்ட் பற்றி தான். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அதில் வேலை செய்யும் நிறுவனம் தரப்பில் PF எனும் ஊய்வூதியம் பிடித்தம் செய்யப்பட்டாலும், தனிபட்ட முறையில் பணத்தை ரிட்டையர்மெண்ட்-க்காக சேமிக்க மக்களிடம் ஆர்வம் குறைந்ததில்லை.
பல மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களும் ஓய்வு காலத்திற்கு முன்பே மக்கள் எப்படி தங்களின் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்க வேண்டும் என்பது குறித்து சில வழிகளை கூறுகின்றனர்.
அதில் இந்த FIRE முறை மிகவும் பிரபலமாக உள்ளது, இத FIRE முறை மூலம் எப்படி பணத்தை சேமிப்பது என்பது பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
FIRE (Financial Independence Retire Early) சேமிப்பு முறை!
இந்த F.I.R.E மூலம் உங்கள் மாத வருமானத்தில் கணிசமான தொகையை passive Income எனப்படும் கூடுதல் வருமானத்தைப் பெற எதில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் எனும் வழிமுறைகளைச் சொல்லும் ஒரு சேமிப்பு முறையாகும்.
நீங்கள் 30 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருப்பின் இம்முறையை பயன்படுத்தி உங்களின் முன்கூட்டிய ரிட்டையர்மெண்டிற்கான பணத்தை சேமிக்க முடியும்.
பணத்தை FIRE முறை மூலம் சேமிக்கும் வழிகள்!
முதலில் நீங்கள் உங்கள் ஓய்வூதியத்திற்கான தொகையை கணக்கிட வேண்டும். அதனையடுத்து தற்போது உங்களின் மாத செலவுகளைக் கணக்கிட வேண்டும், அதன்பின் ஒரு நல்ல நிதி ஆலோசகர் உதவியுடன் FIRE முறை மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து உங்கள் ஓய்வூ காலத்தை சந்தோசமாக கழிக்கலாம்.
உங்கள் செலவுகளை குறைத்திடுங்கள்!
நீங்கள் சந்தோஷமான மற்றும் நிம்மதியான ஓய்வு காலத்தை விரும்பினால், கண்டிப்பாக இன்றுள்ள காலகட்டத்தில், உங்களின் செலவினங்கள் மீது மிகக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நீங்கள் தேவையில்லாமலோ அல்லது உங்கள் வருமானத்தை தாண்டிய செலவுகளையோ செய்வதை முற்றிலுமாக தவிர்த்தால் மட்டுமே இந்த FIRE முறை உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
வருமானத்தை உயர்த்த வேண்டும்!
இந்த FIRE முறை மூலம் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்க அடுத்த வழி, நீங்கள் அதிகம் ஊதியம் பெறும் வேலையில் சேர வேண்டும், அல்லது கூடுதல் வருமானம் தரும் வேலை அல்லது தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் வருமானம் தரும் பங்கு வர்த்தக முதலீடு செய்யலாம் ஏனெனில் பங்கு நிறுவனங்கள் அடிக்கடி அதன் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகளை அறிவிக்கும். இதுவும் உங்கள் கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும்.
சேமிக்கும் முறையை விடாமல் பின்பற்ற வேண்டும்!
சிலர் சேமிக்க ஆரம்பித்த சில காலங்களிலேயே பல்வேறு காரணங்களால் சேமிப்பை தள்ளிப் போட்டுவிடுவார்கள். ஆனால் இப்பழக்கம் FIRE முறை சேமிப்புக்கு செட் ஆகாது.
நீங்கள் எவ்வளவுதான் செலவு செய்தாலும், குறிப்பிட்ட தொகையை தவறாமல் சேமிக்க உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் கூறிய இரண்டு வழிகளையும் சரியாக பின்பற்றினாலே இது 90% சாத்தியமாகும்.
கூடுதல் வருமானம் தரும் சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்!
அதெப்படி கூடுதல் வருமானம் தரும் சொத்துக்களில் சேமிப்பது என்றால், முன்னர் கூறியது போலவே டிவிடெண்ட் செலுத்தும் பங்குகளில் முதலீடு செய்வது, பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு, தொடர்ந்து வாடகை அதிகரிக்கும் சொத்துக்களை வாங்கலாம்.
உங்கள் வருமான வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும்!
இவை அனைத்தையும் செய்தால் போதாது, நீங்கள் முதலீடு செய்துள்ள பணம் சரியாக செயல்படுகிறது, அந்நிறுவனம் நல்ல லாபம் ஈட்டுகிறதா, சொத்தின் மதிப்பு உயர்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அதற்கேற்ப உங்கள் முதலீட்டு மற்றும் சேமிப்புத் திட்டங்களை மாற்ற வேண்டும். வெறும் முதலீடு செய்வது மட்டுமே உங்கள் பணத்தை இரட்டிப்பாக்காது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications