இந்தியாவில் நமக்கு இருக்கும் முதலீட்டு வாய்ப்புகளில் முக்கியமானது சொந்தமாக ஒரு இடத்தை வாங்குவது. இவ்வாறு நிலமோ அல்லது வீட்டு மனையோ வாங்கும் போது பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லையெனில் நாம் பெரிய தொகை கொண்டு செய்யக்கூடிய இந்த முதலீடு நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். எனவே ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட ஐந்து விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.

1. நிலத்தை வாங்குவதற்கு முன்பாக அந்த இடம் தொடர்பாக முழுமையான ஆய்வினை நடத்துவது கட்டாயம். அந்த இடத்தில் அடுத்த கட்டமாக என்னென்ன உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன, அந்த ஏரியா எப்படி முன்னேற்றம் அடைய இருக்கிறது, அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கும் இந்த பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பு,மற்றும் மின்சார இணைப்பு கழிவுநீர் கட்டமைப்புகள், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்வது அவசியம். நீங்கள் இடம் வாங்கக்கூடிய பகுதியில் உள்ள தற்போதைய பொருளாதார சூழல் ,வேலை வாய்ப்புகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் இருக்கின்றனவா என்பனவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
2. நீங்கள் வாங்கும் இடம் எந்த வில்லங்கமும் இல்லாமல் இருக்கிறதா என்பதற்கான ஆவணங்களை சரி பார்ப்பது அவசியம். நீங்கள் சொத்தினை வாங்கிய பிறகு வேறு யாரேனும் அதற்கு உரிமை கோரி வந்தால் அது பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும். எனவே ஒரு இடத்தை வாங்குவதற்கு முன்பு அந்த இடத்தின் உரிமையாளர் குறித்த விவரங்களையும் நிலத்தின் பட்டா உள்ளிட்ட தகவல்களையும் அரசின் இணையதளங்களை பயன்படுத்தி நாம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
3. நீங்கள் வாங்கக் கூடியது வீட்டுமனையாக இருந்தால் அதற்கு உள்ளூர் நிர்வாக அமைப்பு உரிய அனுமதி தந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். பொதுவாக உள்ளூர் அமைப்புகள் குறிப்பிட்ட இடங்களை வீட்டுமனைகள், விவசாய நிலங்கள், புறம்போக்கு பகுதிகள் என வரையறை செய்திருக்கும். நீங்கள் வாங்கக்கூடிய இடம் எந்த பட்டியலில் வருகிறது? ,அந்த இடத்தில் என்னென்ன செய்வதற்கு அனுமதி உண்டு என்பன போன்ற தகவல்களை தெரிந்த பின்பு தான் அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலமோ அல்லது இடமோ வாங்கக்கூடிய முடிவையே எடுக்க வேண்டும்.
4. புரோக்கரேஜ் கமிஷன் தொகை என்பது நமக்கு ஒரு நிதிச் சுமையாக ஏற்பட்டுவிடும். எனவே புரோக்கர்களிடம் முன்கூட்டியே எவ்வளவு தொகை புரோக்கரேஜ் வழங்க வேண்டும் என்பதை பேசி தீர்மானம் செய்து கொள்வது நல்லது. ஒருவேளை கூடுதலாக அவர்கள் கமிஷன் கேட்கலாம், அல்லது மறைமுகமாக ஏதேனும் கட்டணங்களை வசூல் செய்யலாம். அதுமட்டுமின்றி அந்த நபர் நம்பகமானவரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
5. அதேபோல நீங்கள் அந்த இடத்தை பதிவு செய்வதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப பணத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இடம் அல்லது நிலம் என்பது உடனடியாக பணமாக்க முடியாத ஒரு முதலீடு கிடையாது. நீங்கள் நினைத்த உடனே அதனை விற்று விட முடியாது. அதை முதலில் கவனத்தில் கொண்டு தான் இடம் வாங்கும் முடிவை எடுக்க வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications