இந்தியாவில் முதலீடு தொடர்பான மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. 1 லட்சம் கொடுத்தால் 2 லட்சமாக தருவோம், தினமும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும் , ஒரே நாளில் இத்தனை சதவீதம் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி மோசடியாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை களவாடி செல்கின்றனர்.
எப்படியாவது குறுகிய காலத்திலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசையே இப்படி ஏமாந்து போக காரணமாக உள்ளது. நம்முடைய முதலுக்கு மோசம் போகாத ரிஸ்க்கே இல்லாத அதே வேளையில் நல்ல வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசாலேயே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தபால் நிலையங்கள் வாயிலாக பல்வேறு முதலீடு திட்டங்கள் நமக்கு கிடைக்கின்றன.

தபால் நிலைய முதலீட்டு திட்டங்களில் நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். அதே போல ஒரு கணிசமான வருமானமும் வரும். வங்கி முதலீட்டு திட்டங்களை விட நமக்கு சிறந்த வட்டி வருமானம் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கக்கூடிய ஒரு ஸ்பெஷல் திட்டம் குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் என்பது அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கக்கூடிய முக்கியமான ஒரு முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே நீங்கள் செய்யக்கூடிய முதலீடுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். வங்கி டெபாசிட் திட்டங்களை விட இது அதிக வட்டி தருகிறது.
இந்த திட்டத்தில் உங்களுடைய முதலீடு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களில் இரட்டிப்பாக மாறும். இதுதான் இதன் முதிர்வு காலமும் கூட. உதாரணமாக இந்த திட்டத்தில் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் இதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய வட்டி தொகையும் சேர்த்து அடுத்த ஆண்டு வட்டி தொகை வழங்கப்படும். காம்பவுண்டிங் முறையில் இது வளர்ச்சி அடைகிறது.
அந்த வகையில் இந்த திட்டத்தில் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 9 ஆண்டுகள் 5 மாதங்களில் இது 10 லட்சம் ரூபாயாக மாறும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் போது பான் கார்டு குறிப்பிட வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications