நம்மில் பலரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறோம். அத்தகைய விருப்பங்களை தான் போஸ்ட் ஆபீஸ்கள் நமக்கு வழங்குகின்றன. வயதான காலத்தில் நிலையான வருமானம் பெறுவதற்காக தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதலீடு செய்யலாம். இந்த அரசாங்கத் திட்டமானது..பிற சேமிப்புத் திட்டங்களை விடவும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் பெறுவதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்களில் அனைத்து வயதினருக்கும் ஏற்ப பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகிறது. அரசாங்கத் திட்டம் என்பதால் உங்கள் முதலீட்டுக்கு எந்தவித அபாயமும் இன்றி கணிசமான வருமானத்தை வழங்க உதவுகிறது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தற்போது 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் திறக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். SCSS திட்டத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தான் முதலீடு செய்ய முடியும். கூடுதல் டெபாசிட்களை செய்ய முடியாது. அதேபோல பல முறை டெபாசிட் செய்த பணத்தை திரும்ப பெறவும் முடியாது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: SCSS திட்டத்திற்கு கணக்கு திறக்க தனிநபர்கள் 60 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். 55 முதல் 60 வயதுகுட்பட்ட விருப்ப ஓய்வு பெற்ற நபர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல 50 வயதுடைய விருப்ப ஓய்வு வாங்கிய நபர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் கீழ் கணக்கு தொடங்க முடியும். SCSS திட்டத்திற்கு தனிநபர் கணக்கையும் திறக்கலாம் அல்லது கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும்.
மாதம் ரூ.20,000 வருமானம் பெறுவது எப்படி?: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம் என்று முன்பே பார்த்தோம். ஆனால் அதிகபட்ச முதலீடு ரூ.30 லட்சம் ஆகும். 1,000-த்தின் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் மொத்தமாக முதலீடு செய்யலாம். ஒரு வேளை ரூ.30 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 8.2 சதவீத வட்டி விகிதத்தில் மாதந்தோறும் 20,000 ரூபாய் வழங்கப்படும்.
இந்த வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது. SCSS திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒரு வேளை கணக்கு வைத்திருப்பவர் துரதிஷ்டவசமாக முன்கூட்டியே இறந்து விட்டால் கணக்கு மூடப்பட்டு அந்த தொகை அவர் நியமித்த நாமினிக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications