இந்தியாவில் முதலீடு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த செயலி வாயிலாக முதலீடு செய்யுங்கள், இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் , எங்களிடம் பணத்தை கொடுங்கள் தினம்தோறும் அதற்கு வட்டியோடு சேர்த்து லாபத்தை தருகிறோம் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை காட்டி ஏராளமானவர்கள் மோசடி செய்து பணத்தை களவாடி வருகின்றனர்.
இந்தியாவில் இதுபோன்ற நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒரு நிறுவனமாகவே இயங்கி மக்களின் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்க கூடிய கும்பல்களும் இருக்கின்றன. ஆனால் உங்களுடைய முதலுக்கு மோசம் ஏற்படுத்தாத பாதுகாப்பான அதேவேளையில் அதிக வருமானம் தரக்கூடிய எவ்வளவோ முதலீடு திட்டங்களை மத்திய அரசே தபால் நிலையங்கள் வாயிலாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தபால் நிலையங்கள் வாயிலாக கிடைக்கக்கூடிய ஒரு டெபாசிட் திட்டம் குறித்து நாம் தற்போது விரிவாக பார்க்கலாம். வங்கிகளில் எப்படி நாம் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளை மேற்கொள்கிறோமோ அதே போல தபால் நிலையங்களில் டைம் டெபாசிட் என்ற திட்டம் கிடைக்கிறது. இதில் நாம் ஒரு கணிசமான தொகை முதலீடு செய்துவிட்டால் போதும் ஆண்டு தோறும் நமக்கான வட்டி தொகை வந்து கொண்டே இருக்கும்.
ஓராண்டுக்கான டெபாசிட் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 6.9% வரை வட்டி வருமானம் கிடைக்கிறது. இதுவே நீங்கள் இரண்டு ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்தல் 7 சதவீத வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுகால திட்டம் என்றால் 7.1% வட்டி, ஐந்தாண்டு கால சேமிப்பு திட்டம் என்றால் 7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இந்தியாவில் எந்த ஒரு வங்கியும் டெபாசிட் திட்டங்களுக்கு இவ்வளவு பணம் வழங்குவது கிடையாது. எனவே உங்கள் கைவசம் இருக்கும் பணத்தை நீங்கள் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டுமா அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டுமா என்பதை நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
இந்திய குடிமக்கள் அனைவருமே போஸ்ட் ஆபீஸில் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட டைம் டெபாசிட் கணக்குகளை தொடங்கி முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு காலாண்டுக்கும் உங்களுடைய வட்டி பணமானது காம்பவுண்டிங் செய்யப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
ஐந்தாண்டு கால டெபாசிட் டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் வருமான வரி கணக்கு தாக்கல் என்பது 80சி பிரிவின் கீழ் குறிப்பிட்டு வரி விலக்கும் பெறலாம். தற்போது இந்த திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் வரை வட்டி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக உங்களுடைய கையில் 4.5 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது அதனை ஐந்தாண்டு காலத்திற்கான டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது.
அப்படி என்றால் ஐந்து ஆண்டுகள் முடியும்போது நீங்கள் முதலீடு செய்த 4.5 லட்சம் கூடுதலாக 2.01 லட்சம் ரூபாய் வட்டி தொகையும் கிடைக்கும். நீங்கள் 2.5 ஐந்து லட்சம் ரூபாய் இதேபோன்று ஐந்து ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்தால் கூட 1.12 லட்சம் வட்டி வருமானமாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications