தனியார் நிறுவனங்களில் சம்பளத்திற்காக வேலைக்கு செல்பவர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி சார்ந்த ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியாவில் ஈபிஎஃப்ஓ அமைப்பின் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கால மாற்றத்திற்கு ஏற்பவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்பவும் ஈபிஎஃப்ஓ அமைப்பு பிஎஃப் கணக்குகளை மேலாண்மை செய்யும் முறையையே பெருமளவில் மாற்றி அமைத்திருக்கிறது. ஈபிஎஃப்ஓ கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வது , பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து கொள்வது, பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என பெரும்பாலான வேலைகளை நாம் அலுவலகத்திற்கு செல்லாமல் நம்முடைய செல்போன் வாயிலாகவே முடித்துக் கொள்ள முடிகிறது.

நம்முடைய பிஎஃப் கணக்கில் நாம் மற்றும் நாம் வேலை செய்யும் நிறுவனம் சார்பாக செய்யப்படும் பங்களிப்பு தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை நாம் நம்முடைய அவசர தேவைகளுக்கு பெற்று கொள்ள முடியும். இதற்கு முன்பு பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அது ஒரு நீண்ட நெடிய நடைமுறையாக தான் இருந்தது. தற்போது ஈபிஎஃப்ஓ அமைப்பு அந்த நடைமுறையை பெருமளவில் மாற்றி இருக்கிறது.
விண்ணப்பம் செய்த மூன்று நாட்களுக்குள் சந்தாதாரரின் கணக்கில் அந்த பணம் வரவு வைக்கப்படுவதை ஈபிஎஃப்ஓ அமைப்பு உறுதி செய்கிறது. பிஎஃப் கணக்கிலிருந்து எளிமையாக நாம் பணத்தை எடுக்க முடியும் , அது எப்படி என்பதை தான் தற்போது விவரமாக பார்க்க போகிறோம்.
முதலில் ஈபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்கு எது செல்ல வேண்டும் அதில் உங்களுடைய UAN எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும். இதனை அடுத்து ஆன்லைன் சர்வீசஸ் என்ற பிரிவின் கீழ் கிளைம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்களுடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் காட்டும் அதிலிருக்கும் தகவல்கள் சரியாக இருக்கின்றதா என்பதை நீங்கள் ஒரு முறை சரி பார்க்க வேண்டும் . இதனை அடுத்து அங்கே வழங்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எந்த காரணத்திற்காக பணத்தை எடுக்கிறீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் .
உங்களுடைய அந்த படிவத்தை சப்மிட் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும் அந்த ஓ டி பி கொண்டு நீங்கள் ஒரு முறை சரிபார்த்து செய்ய வேண்டும். நீங்கள் கோரும் பணம் மற்றும் அதற்கான காரணம் , தாக்கல் செய்த ஆவணங்கள் சரியாக இருந்தால் அடுத்த 72 மணி நேரத்துக்குள் உங்களுடைய வங்கி கணக்கில் நீங்கள் கோரிய பணமானது வந்து சேர்ந்து விடும்.


Click it and Unblock the Notifications