1 கோடி ரூபாய் வேண்டுமா.. ஸ்மார்ட் முதலீட்டு திட்டம்.. நிச்சயம் வெற்றி தான்..!

ஒரு கோடி ரூபாய், 1-க்கு அப்புறம் 7 ஜீரோ.. ஒரு சாரசரி மனிதனின் மிகப்பெரிய வாழ்நாள் கனவு, இது கனவை அடைய முடியுமா எனப் பலரும் வேதனைப்படுவது உண்டு.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் நிலையான முதலீட்டுப் பழக்கத்தின் மூலம் ஒரு கோடி ரூபாயை எளிதாகச் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 1 கோடி ரூபாய் கனவு

1 கோடி ரூபாய் கனவு

1 கோடி ரூபாயை சம்பாதிக்கக் கனவு கொண்டு அனைவரும் தங்களது வாழ்நாளில் இளம் பருவத்திலேயே முதலீடு செய்யத் துவங்கினால் விரைவாகக் கனவு இலக்கை எளிதாக அடைய முடியும். மேலும் ஒவ்வொருமாதமும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 இரு முக்கியக் காரணிகள்

இரு முக்கியக் காரணிகள்

முதலீட்டு அளவும், முதலீட்டில் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகிய இரு காரணிகள் தான் எவ்வளவு சீக்கிரம் கோடி ரூபாயை சம்பாதிக்க முடியும் என்பதை நிர்ணயம் செய்யும்.

எனவே உங்கள் மாத வருமானத்தைச் சரியான முறையில் திட்டமிட்டு, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யுங்கள்.

 

 8 சதவீத லாபம்

8 சதவீத லாபம்

இந்த வகையில் தற்போது பிபிஎப் போன்ற அரசுத் திட்டங்களில் கிடைக்கும் 8 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 54,661 ரூபாயும், 20 வருடத்திற்கு 16,977 ரூபாயும், 30 வருடத்தில் 6,710 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

 10 சதவீத லாபம்

10 சதவீத லாபம்

இதுவே 10 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 48,817 ரூபாயும், 20 வருடத்திற்கு 13,167 ரூபாயும், 30 வருடத்தில் 4,424 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

 14 சதவீத லாபம்

14 சதவீத லாபம்

14 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 38,600 ரூபாயும், 20 வருடத்திற்கு 7,685 ரூபாயும், 30 வருடத்தில் 1,821 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

 இந்தியாவில் பணவீக்கம்

இந்தியாவில் பணவீக்கம்


இந்தியாவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 6 சதவீதம் வருடாந்திர பணவீக்க அளவீட்டில் தற்போது உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 1 கோடி ரூபாய் போதும் என நீங்கள் நினைத்தால் 5 வருடத்திற்கும் பின் அதே தேவைகளுக்கு 1.34 கோடி ரூபாய் தேவை.

இதேபோல் 10 வருடத்திற்குப் பின் 1.79 கோடி ரூபாய் தேவை, இதுவரை 20 வருடத்திற்குப் பின் 3.21 கோடி ரூபாய் தேவை. இதையும் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.

 

 5 வருட முதலீட்டு திட்டம்

5 வருட முதலீட்டு திட்டம்

இந்தப் பணவீக்க பிரச்சனையில் இருந்து சிக்கிக்கொள்ளாமல், நீங்கள் அதிகப்படியான தொகையை முதலீடு செய்யத் தயாராக இருந்து 5 வருடத்தில் உங்கள் கனவு இலக்கான 1 கோடி ரூபாயை கைப்பற்றிவிடலாம்.

இதன் படி 5 வருடத்தில் ஒரு கோடி ரூபாயை சம்பாதிக்க 8% லாபம் கிடைக்கும் திட்டத்தில் 1,36,097 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், 10% லாபம் கிடைக்கும் திட்டத்தில் 1,29,137 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், 12% லாபம் கிடைக்கும் திட்டத்தில் 1,22,44 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், 14% லாபம் கிடைக்கும் திட்டத்தில் 1,16,016 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+