சென்னை: கோடைக் காலம் என்பதால் அனைவரும் குளுகுளுவென்று இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். இதற்காக பலரும் தங்கள் வீட்டில் ஏர் கண்டிஷனர்களை வாங்கி மாட்டி இருப்பார்கள். சிலர் தங்கள் வீடுகளில் முன்னாடியே ஏசிகளை வைத்திருப்பார்கள். இது போன்ற வீடுகளில் கரண்ட் பில் செலவை மட்டும் கடந்த மாதத்திற்கு பார்த்தால்.. அப்பப்பா சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கும். இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவற்றை செய்யாமல் இருக்கும்போது நீங்களும் உங்களுடைய கரண்ட் பில் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
உங்களின் ஏர் கண்டிஷனரின் மின்சாரச் செலவைக் குறைப்பதற்கான சில யுக்திகளைப் பார்ப்போம்:

ஏசியின் சரியான இன்ஸ்டலேஷன்: மின்சாரத்தை சேமிக்க உங்களுடைய ஏர்கண்டிஷனர்களை முறையாக பொருத்த வேண்டும். அதாவது உங்கள் சுவர்களில் அறையின் வளைவுகள் மற்றும் மூலைகளில் பொருத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சரியான இடத்திலும் உயரத்திலும் ஏசிகள் பொருத்தப்பட்டால் குறைந்த நேரத்தில் அறை முழுவதுமாக குளிர்ச்சி அடையும்.
புது மாடல் ஏசிகளைத் தேர்வு செய்யுங்கள்: பழைய மாடல்களை விட, புதிய செயல்திறன் கொண்ட மாடல்கள், மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. ஸ்டார் ரேட்டிங் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கவும். அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கின்றன. நீங்கள் ஏசி வாங்கும்போது ஸ்டார் ரேட்டிங்-ஐ மதிப்பீடு செய்யவும்.
ஏர் கண்டிஷனர்களின் ஃபில்டர்களைப் பராமரிக்கவும்: உங்களிடம் உள்ள ஏசிகளின் ஃபில்டர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து மாட்டுங்கள். சில நேரங்களில் ஃபில்டர்-இல் தூசிகள் சென்று அடைத்து விடும். இதனால் ஏசிகளின் குளிரூட்டும் செயல்திறன் குறையலாம். இது போன்ற நேரங்களில் உங்கள் ஏசி ஃபில்டர்களை தவறாமல் சுத்தம் செய்து சர்வீஸ் செய்வது நல்லது. பலரும் இந்த காரணத்தை கவனிக்காமல் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி நீண்ட நேரம் ஏசியை ஆன் செய்து வைத்திருக்கிறனர். இது போன்ற காரணங்களாலும், உங்களுக்கு மின்சாரம் அதிகரிக்கலாம்.
ஏர் கண்டிஷனர்களில் டைமர்களைப் பயன்படுத்தவும்: தூங்கும் நேரங்களில் ஏசிகளில் டைமர் அல்லது ஸ்லீப் மோடு பயன்படுத்தி இயக்கிக் கொள்ளலாம். இதனால் நீங்கள் நள்ளிரவில் எழுந்து உங்கள் ஏசியின் வெப்பநிலையை அட்ஜஸ்ட் செய்யும் தேவை குறைகிறது. அதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
சீரான நிலையில் இயக்கவும்: ஏசியின் வெப்பநிலை அமைப்பை 24°C அல்லது 25°C வெப்பநிலையில் வைத்திருப்பது உங்கள் மின்சாரத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்துக்கும் நல்லது. அதிக குளிர்ச்சி சிலருக்கு சளி பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் உடல் நலனையும், நிதி நலனையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சீரான வெப்பநிலையை உபயோகிப்பது எல்லாவற்றுக்கும் சிறந்தது.
சரியாக உபயோகியுங்கள்: சிலர் ஏசிகளை ஆன் செய்துவிட்டு அப்படியே மறந்து விடுகின்றனர். இதனால் யாரும் இல்லாத நேரங்களிலும், சில வீடுகளில் ஏசி ஆன் செய்யப்பட்டு இருக்கிறது. இது உங்களை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். "மின்சார சிக்கனம் தேவை இக்கணம்" என்ற வாசகங்களை எல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும்படி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவற்றைப் பார்த்தும் நாம் அதனை சரிவர செய்வதில்லை. இது ஏசிக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருக்கும் லைட், ஃபேன் என எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications