சென்னை: பொதுவாக தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவதை நம்மால் பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு என்றால் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தரும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த புதுமைப்பெண் திட்டம். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெற முடியும் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவாக இந்த புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்?: இந்தத் திட்டத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகள் பயன்பெற முடியும். அதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி உரிமை திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்து விட்டு, அதன் பிறகு 8ஆம் வகுப்பில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்துவிட்டு மேற்படிப்பில் சேரும் மாணவிகளும், இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அனால், அவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்திருக்க வேண்டும்.
மேலும் அந்த மாணவிகள் வேறு ஏதேனும் அரசு தரும் உதவி தொகையைப் பெற்றுக் கொண்டிருந்தாலும், அவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ. 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை பள்ளி கல்வியை முடித்த பிறகு காலேஜ் சேர்வதற்கோ அல்லது ஏதேனும் அவர்களுக்கு பிடித்த கோர்ஸ் சேர்வதற்கோ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கிட்டத்தட்ட அனைத்து படிப்புகளிலும் சேரும் தகுதி பெற்ற மாணவியருக்கு, இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, அவர்கள் நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால், அந்த நான்கு ஆண்டுகளிலும் அவர்களுக்கு மாத மாதம் ரூ. 1,000 ரூபாய் வழங்கப்படும். பள்ளிக்கல்வியை முடித்து எந்த பட்டயப் படிப்பை படித்தாலும் தகுதி பெறும் அனைத்து மாணவியருக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும்.
எவ்வளவு காலத்திற்கு உதவித்தொகை கிடைக்கும்?: நீங்கள் ஏதேனும் இளங்கலைப் பட்டம் படித்தால் மூன்று வருடங்களுக்கும், மேலும் ப்ரொபஷனல் கோர்ஸ் என்று சொல்லப்படுகிற மருத்துவப் படிப்பு அல்லது இன்ஜினியரிங் படிப்பு போன்றவற்றிற்கு நான்கு ஆண்டுகள் என நீங்கள் தேர்வு செய்த படிப்பை பொறுத்து அத்தனை ஆண்டுகளுக்கும் உங்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும்.
புதுமைப் பெண் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.pudhumaipenn.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அந்த இணையதளத்தில் இன்ஸ்டிடியூஷன்/காலேஜ் என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
அந்த விவரங்களை என்டர் செய்து, இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். நீங்கள் தகுதியுடைய நபர் எனில், உங்களுக்கான உதவித்தொகை மாதம் மாதம் உங்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, பர்த் சர்டிபிகேட், 10ஆம் வகுப்பு மார்க் சீட், 12ஆம் வகுப்பு மார்க் சீட், வருமான வரி சான்றிதழ்.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தைக் காப்பதற்காக அரசு கொண்டுவந்துள்ள, இந்த புதுமைப் பெண் திட்டம் கண்டிப்பாக, அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications