ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தான் நமது பிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கிறது. பிஎஃப் கணக்கில் பணத்தை பராமரிப்பதற்காக சில விதிகளை ஈபிஎஃப்ஓ வகுத்துள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மினிமம் பேலன்ஸ் குறித்த விதிகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
பிஎஃப் பணம் என்பதே நம் ஓய்வுகால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான். இருந்தாலும் ஒரு அவசர பண தேவை ஏற்படும் போது நாம் பிஎஃப் பணத்தை எடுத்து கொள்ளும் வசதியை ஈபிஎஃப்ஓ வழங்குகிறது. ஆனால் அதற்காக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் எடுத்து கொள்ள முடியாது. ஒரு மினிமம் பேலன்ஸை நாம் பிஎஃப் கணக்கில் பராமரிப்பது கட்டாயம்.

ஈபிஎஃப்ஓ விதிகளின்படி,பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் முழுமையாக எடுத்துவிட முடியாது. எந்தவொரு காரணத்திற்காக பிஎஃப் பணத்தை எடுத்தாலும் கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீத தொகை இருப்பு வைக்கப்பட வேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகையை மட்டுமே தகுதியின் அடிப்படையில் பெற முடியும்.
உதாரணமாக உங்கள் கணக்கில் 1 லட்சம் ரூபாய் பிஎஃப் பணம் உள்ளது என வைத்து கொண்டால் அதில் 25% தொகை அதாவது 25,000 ருபாயை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள 75,000 ரூபாயை மட்டுமே நீங்கள் எடுக்க முடியும். பணம் எடுக்கும் வசதி தான் உள்ளதே என்பதற்காக சந்தாதாரர்கள் முழு பணத்தையும் எடுத்தால் அவர்களின் ஓய்வுகால நிதி பாதுகாப்பே கேள்விக்குறியாகும் என்பதற்காகவே இந்த மினிமம் பேலன்ஸ் விதி உள்ளது.
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு அரசு ஆண்டுக்கு 8.25 வட்டியை வழங்குகிறது. எனவே 75,000 ரூபாய் எடுக்கப்பட்டாலும் மீதமுள்ள 25,000 ரூபாய் பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும். பிஎஃப் பணம் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைய கூடியது என்பதால் முடிந்தவரை அந்த பணத்தை எடுப்பாமல் இருப்பது தான் நல்லது.
தற்போது அரசு பிஎஃப் சம்பள வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. எனவே உங்களின் பிஎஃப் பங்களிப்பு இந்த மாதம் முதல் இன்னமும் உயர போகிறது. அதிக நிதி பங்களிப்பு என்றால் ஓய்வு காலத்தில் அதிக பணம் கைக்கு கிடைக்க வழிவகை செய்யும்.பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் அனைத்து விவரங்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பிஎஃப் கணக்கில் கிடைக்கும் அனைத்து பலன்களையும் தடையில்லாமல் எளிதாக பெற முடியும்.


Click it and Unblock the Notifications


