EPFO புதிய திட்டம் அமல்: அது என்ன ரூ.1,800 விதி? PF கணக்கு வைத்திருப்போருக்கு இது ஏன் முக்கியம்?

தனியார் துறையில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வுகால நிதி பாதுகாப்புகாக செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFOஇல் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நீண்ட காலமாக அமலில் இருந்த 1952-ஆம் ஆண்டு திட்டத்திற்கு பதிலாக, புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026 தற்போது அமல்படுத்தியுள்ளது. ஜூன் 29ஆம் தேதி இது அரசிதழில் வெளியாகி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

புதிய திட்டத்தின் கீழ் பிஎஃப் கணக்கில் பல்வேறு புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய திட்டத்தின் படி மாதாந்திர பிஎஃப் பங்களிப்பு தொகை மாறி இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் பிஎஃப் பங்களிப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

EPFO புதிய திட்டம் அமல்: அது என்ன ரூ.1,800 விதி? PF கணக்கு வைத்திருப்போருக்கு இது ஏன் முக்கியம்?

ஒரு ஊழியரின் சம்பளம் மற்றும் நிறுவனம் சார்பில் பணம் என தலா 12% பங்களிப்பு அப்படியே தான் தொடர்கிறது. இந்த புதிய விதியின்படி, சட்டரீதியான ஊதிய வரம்பான ரூ.15,000-க்கு 12% என பிஎஃப் பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு மாதத்திற்கு அந்த தொழிலாளியின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு ரூ.1,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1800-க்கு கீழ் பங்களிப்பு செய்ய முடியாது. குறைந்தபட்சம் மாதம் ரூ.1800 ஆவது பிஎஃப் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

Also Read

இதுவரை பல ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தின் கொள்கை அல்லது ஒப்பந்தத்தின்படி, ரூ.15,000-க்கும் அதிகமான சம்பளத்திற்குப் பி.எஃப் பங்களிப்பு செய்து வந்தனர். ஆனால் புதிய விதிகளின்படி, ரூ.1,800-க்கு மேல் செய்யப்படும் எந்தவொரு பங்களிப்பும் Voluntary Contribution அதாவது தானாக முன்வந்து பங்களிப்பு செய்யப்படும் பணமாக கருதப்படும்.

ஒரு வேளை ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க விரும்பினால், மாதாந்திரம் பிஎஃப் கணக்கில் ரூ.1,800-க்கும் மேல் பங்களிப்பு செய்யலாம். ஆனால், ஊழியர் கூடுதல் தொகை செலுத்தினால், அந்த அளவுக்கு நிறுவனம் (Employer) சமமான தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என புதிய விதி கூறுகிறது.

புதிய விதிகளின் படி பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் நடைமுறைகள் எளிமையாகியுள்ளன. முன்பு பணம் எடுப்பதற்கான தேவைகளின் பட்டியல் பல இருந்தன அதனை வெறும் மூன்றாக குறைத்துவிட்டனர். இதன்படி

உடல்நலக் குறைபாடு, கல்வி மற்றும் திருமணம் போன்ற அவசரத் தேவைகள்

வீடு வாங்குவது அல்லது கட்டுவது தொடர்பான தேவைகள்.

சிறப்புச் சூழ்நிலைகள்

என்ற 3க்குள் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு குறைந்தபட்ச இருப்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இனி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Recommended For You

புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், EPFO சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், இ-பாஸ்புக் வசதி மற்றும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஒருங்கிணைப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவண பணிகளைத் தவிர்த்து, ஊழியர்கள் விரைவாகவும் வெளிப்படையாகவும் சேவைகளை பெற முடியும்.

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய திட்டம் உங்கள் ஓய்வுக்கால பலன்களை குறைக்காது. மாறாக, எது கட்டாய பங்களிப்பு, எது விருப்ப பங்களிப்பு என்பதில் தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. அதே வேளையில் மாதம் ரூ.1800 பிஎஃப் பங்களிப்பு என்பதிலும் மாற்றமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+