ஓய்வூதிய காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் போதுமான அளவு தொகையை சேமித்து வைப்பது சவாலாகவே உள்ளது. இதற்கு மத்தியில் நமக்கு உதவி செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் "EPF" திட்டம். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வு கால வாழ்க்கையைப் பாதுகாக்க EPFO அமைப்பு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது. ஆனால், பல விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில், பலருக்கும் தெரியப்படாத ஒன்று உள்ளது. அதுதான் ஊழியர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கும் EPFO லாயல்டி திட்டம். இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
EPFO அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ். இதன் கீழ் எந்த ஒரு சந்தா தொகையோ அல்லது வேறு ஏதேனும் தொகையோ டெபாசிட் செய்யாமலேயே, குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றி உங்களால் 50,000 ரூபாய் வரை பெற முடியும்.

லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் (loyalty-cum-life benefits) என்றால் என்ன?: நீண்ட காலம் பங்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் EPFO அமைப்பு செய்த சிறப்பு ஏற்பாடுதான் லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ். இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை பெறலாம். ஆனால், இந்தப் பணத்தைப் பெற ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் பலனைப் பெறுவது எப்படி?: இந்த கூடுதல் பலனைப் பெற விரும்பும் EPFO உறுப்பினர்கள் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் அதே EPF கணக்கில் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தத் தொகையை ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவர்களுடைய பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.
யாருக்கு எவ்வளவு லாயல்டி பெனிபிட் கிடைக்கும்?: உங்களுடைய அடிப்படைச் சம்பளம் 5000 ரூபாய்க்கும் கீழிருந்து தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே EPF கணக்கில் பங்களிப்பு செய்து வந்தால் 30,000 ரூபாய் வரை கணக்கை முடிக்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல உங்களுடைய அடிப்படை சம்பளம் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 ரூபாயாக இருந்தால், நீங்களும் ஒரே EPF கணக்கில் பங்களிப்பு செய்து வந்தால் ரூ. 40,000 வரையில் முதிர்வு காலத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல உங்களுடைய அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்து நீங்கள் EPF கணக்கில் பங்களிப்பு செய்தால் 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 2024 நிலவரப்படி, இந்தியாவில் அடிப்படை ஊதியம் மற்றும் ரூ. 15,000 வரை அகவிலைப்படியுடன் சம்பளம் பெறும் ஊழியர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். ஆனால் 15,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் அல்லது PF கமிஷனரிடம் ஒப்புதல் பெற்றால் EPF கணக்கைத் தொடங்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications