EPFO: ஓய்வூதியதாரர்களுக்கு இனி மாதம் ரூ.7500 கிடைக்கும் ! அசத்தலான அறிவிப்பு வெயிட்டிங்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் எண்ணற்ற உறுப்பினர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வர இருக்கிறது. ஏற்கனவே பிஎஃப் திட்டங்களில் பங்களிப்பு செய்வதற்கான குறைந்தபட்ச சம்பளம் வரம்பை உயர்த்த அரசு சார்பில் ஆலோசனை நடந்து வருகிறது. இதனால் தனிமனிதரின் பங்களிப்பு மட்டுமின்றி அவர்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து செய்யப்படும் பங்களிப்பும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பிஎஃப் (PF) பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்யவும் ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு திட்டமிட்டு வருகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு இனி மாதம் ரூ.7500 கிடைக்கும் !

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS 95) கீழ் ஏற்படப் போகும் மாற்றம்: தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொகை தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொழிலாளர் சங்கங்களும், ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் இபிஎஃப்ஓ அமைப்பு தங்களுடைய உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி அளிக்கும் வகையில் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயிலிருந்து ரூ.7500 ஆக உயர்த்தவும் பரிசீலித்து வருகிறது.

தொழிலாளர் சங்கங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்கும் வகையில் நாடாளுமன்றக் குழுவும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் மற்றும் ஏடிஎம் வசதி: ஓய்வூதிய வரம்பில் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் வெளியான பிறகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் வட்டி விகிதம் EPFO உறுப்பினர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதேபோல நடைமுறைக்கு வரவுள்ள அடுத்த முக்கிய மாற்றம் என்றால் அது ஏடிஎம் மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி தான். இந்தத் திட்டத்திற்கு பல இபிஎஃப் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த தகவலும் வெளியாகும் வாய்ப்புள்ளது.

புதிய சாதனை: இந்த நிதியாண்டில் மட்டும் EPFO அமைப்பு சுமார் 8.31 கோடி PF கிளைம்களை தீர்த்து வைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 6.01 கோடியாக இருந்தது. இதில் 51 கோடி நபர்கள் முன்கூட்டியே தங்கள் பிஎஃப் பணத்தை வித்ட்ரா செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் பிஎஃப் பணத்தை எடுப்பது சற்று சவாலாக இருந்தது. ஆனால் EPFO அமைப்பு ஆட்டோமேஷன் மூலம் வேகத்தை மேம்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 59.19 சதவீதமாக இருந்த பிஎஃப் பணம் எடுக்கும் கோரிக்கைகள், இந்த ஆண்டு 71.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் மயம்: இதுவரையில் 6.68 கோடி PF பணம் எடுக்கும் கோரிக்கைகள் எந்த செக் நகலும் பதிவேற்றம் செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல EPFO அமைப்பு 70.55 லட்சம் ட்ரான்ஸ்பர் க்ளைம்களையும் செய்துள்ளது. இதில் ஏப்ரல் 2026-இல் மட்டும் 61.03 லட்சம் கிளைம்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 98.70% கோரிக்கைகள் வெறும் 20 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல எந்தவித பரிவர்த்தனையும் இல்லாமல் இன்-ஆக்டிவாக இருக்கும் பிஎஃப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்காகவே இ-பிராப்தி (E-PRAAPTI) என்ற போர்ட்டலையும் EPFO அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆதார் நம்பரை மட்டும் கொண்டு பழைய பிஎஃப் கணக்குகளை நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியும். UAN-உடன் தங்கள் கணக்குகளை இணைக்காத PF பயனர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+