இந்தியா முழுவதும் இருக்கும் மாத சம்பளக்காரர்கள் ஈபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation) உறுப்பினர்களுக்கு தங்கள் புரொவிடண்ட் பண்ட் கணக்கில் இருக்கும் பணத்தை உடனடியாக பெறும் வசதி விரைவில் வரவுள்ளது. பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை பல அவசர காரணத்திற்காக மக்கள் பயன்படுத்தி வரும் வேளையில், இதை வித்டிரா செய்வது நீண்ட நெடியாக பணியாக உள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முயற்சியில் பல ஏற்பாடுகள் வேகமாக செயல்பட துவங்கியிருந்தாலும், இன்னும் இன்றைய டிஜிட்டல் கட்டமைப்பு தர நிலைக்கு உயரவில்லை என்ற புகாரும், கருத்துக்களும் இருந்து வரும் வேளையில் மத்திய அரசு தற்போது இன்ஸ்டெட் வித்டிரா சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

ஆதாவது யூபிஐ சேவை மூலம் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ளும் புதிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தொழிலாளர் அமைச்சகம் புதிய அமைப்பை உருவாக்கி வருகிறது. இதில் ஈபிஎப்ஓ தொகையில் பொதுவாக ஒரு பகுதி தொகை நீண்டகால சேமிப்புக்காக பூட்டப்பட்டிருக்கும். மற்றொரு பகுதி உடனடி தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில் ஈபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்கள் ஈபிஎப்ஓ கணக்கில் எவ்வளவு தொகை உடனடி பரிமாற்றத்திற்கு தகுதியானது என்பதை தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த வசதியை பயன்படுத்த உறுப்பினர்கள் தங்கள் யூபிஐ ஆப் மூலம் உடனடி தேவைக்காக இருக்கும் பணத்தை எடுக்கலாம். வழக்கமான டிஜிட்டல் பேமென்ட் போல யூபிஐ பின் உள்ளிட வேண்டும். அடுத்த சில நொடிகளில் பணம் வங்கிக் கணக்குக்கு வந்ததும், ஆன்லைன் பேமென்ட், அன்றாட செலவுகள் அல்லது ஏடிஎம் மூலம் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது இருக்கும் செயல்முறையில் ஈபிஎப்ஓ தளத்தில் லாக்இன் செய்து பணம் எடுக்க கோரிக்கை அளிக்க வேண்டும், இதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது டிஜிட்டல் விண்ணப்பமாக இருந்தாலும், சமர்ப்பித்து பல நாட்கள் காத்திருந்து பணத்தை பெற வேண்டிய நிலை உள்ளது.
இந்த விண்ணப்பத்தை ஈபிஎப்ஓ அலுவலக அதிகாரி சரி பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் ஊழியர்களின் பணிச்சுமையும் அதிகரிக்கிறது. இந்த தாமதத்தை தவிர்க்க யூபிஐ அடிப்படையிலான அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது ஈபிஎப்ஓ அமைப்பு, தற்போது புதிய அமைப்பிற்கான சாப்ட்வேர் சிக்கல்களை சரிசெய்து வருகிறது. இந்த வசதி தொடங்கியவுடன் சுமார் 8 கோடி ஈபிஎப்ஓ உறுப்பினர்களுக்கு பெரும் பயனளிக்கும்.


Click it and Unblock the Notifications