உங்க பிசினஸ்க்கு ஏற்ற 6 அசத்தல் டிப்ஸ்.. இதை மட்டும் செஞ்சா போதும்.. கண்டிப்பா சக்ஸஸ் தான்..!

சென்னை: ஒரு தொழிலைத் தொடங்கி, அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு ஆயிரக்கணக்கான தடைகளைத் தாண்ட வேண்டும். மேலும் பொறுமை மற்றும் செய்யும் தொழிலில் கவனத்துடன் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் ஒரு சுய தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களுடைய வணிகத்தை வளர்ப்பதற்கு, நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே உங்களுக்கு உதவும் வகையில் சில பிசினஸ் டிப்ஸ்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்களுக்கு தகுந்த சுய தொழிலை தேர்வு செய்யுங்கள்: உங்களுடைய புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் எந்த தொழிலில் தலைசிறந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டு இறங்குங்கள். உங்களுக்கு தெரிந்த பிசினஸ் செய்யும் போது, லாபம் அதிகமாக இருக்கும். உதாரணமாக நீங்கள் சமையல் செய்வதில், கெட்டிக்காரர் என்றால் ஒரு ஹோட்டல் வைப்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். இதுபோல் உங்களுடைய திறமை என்ன என்று அறிந்த பின்னர், புது தொழிலைத் தேர்வு செய்யவும்.

 உங்க பிசினஸ்க்கு ஏற்ற 6 அசத்தல் டிப்ஸ்.. இதை மட்டும் செஞ்சா போதும்.. கண்டிப்பா சக்ஸஸ் தான்..!

போட்டியாளர்களைப் பற்றி ஆராயுங்கள்: புதிதாக தொழில் முனைவோராக இருந்தால், உங்கள் தொழிலில், உங்களுக்கு யார் போட்டியாளர்கள் என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் எவ்வளவு தனித்துவமாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய சிந்தியுங்கள். அவர்கள் செய்யும் அதே தொழிலை நீங்களும் செய்தால் எந்த வித வித்தியாசமும் இருக்காது. எனவே, உங்கள் தொழிலில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

சான்றாக உங்களுடைய போட்டியாளர் ஒரே பிராண்ட் துணிகளை மட்டும் விற்பனை செய்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் உங்களுடைய கடையில் மக்களுக்குப் பிடித்த இன்னொரு பிராண்டையும் சேர்த்து விற்பனை செய்யலாம்.

பிசினஸ் பிளானை உருவாக்கவும்: எந்த ஒரு தொழிலைத் தொடங்குவதற்கும் பிளானிங் ரொம்ப முக்கியம். இது நீங்கள் செய்யும் தொழிலைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் செய்யும் தொழில் யாருக்கு ஏற்றது, அதன் இலக்குகள் என்ன, உங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எது தொடர்பானவை, எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யப் போகிறீர்கள் என்பது போன்ற விவரங்கள் உங்களுடைய பிசினஸ் பிளானில் அடங்கும்.

பிசினஸ் மாடலை உருவாக்கவும்: உங்களுடைய தொழிலை வெற்றிகரமானதாக ஆக்க முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். உங்கள் தொழில் விரிவடையும்போது, செலவுகளை அதிகரிக்காமல் அதிக வாடிக்கையாளர்களை கையாளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் இம்போர்ட், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்வதற்கு ஒரு சாஃப்ட்வேரை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்பொழுது உங்களிடம் வெறும் 30 வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் 200 வாடிக்கையாளர்களாக உயர்ந்தால், எந்த செலவும் இன்றி அவர்களுக்கு சீரான சேவையை வழங்கும் விதமாக உங்கள் பிசினஸ் இருக்க வேண்டும்.

உங்களுடைய பிசினஸ்சை பதிவு செய்து உரிமம் பெறுங்கள்: உங்கள் தொழிலை தேர்ந்தெடுத்த பின், அதனைப் பதிவு செய்து உரிமம் பெறுவது அடுத்த படியாகும். அடுத்தது உங்கள் தொழிலின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்துங்கள்: எந்த ஒரு தொழில் என்றாலும், மார்க்கெட்டிங் என்பது மிக மிக முக்கியம். நீங்கள் தயாரிக்கும் பொருட்களோ அல்லது நீங்கள் வழங்கும் சேவையோ எவ்வளவு நன்மையை கொண்டிருக்கிறது, என்பதை மக்கள் உணரும் வகையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், எல்லா தொழிலுக்கும் அடிப்படை இந்த மார்க்கெட்டிங் தான்.

இதுபோன்ற டிப்ஸ்களை, உங்களுடைய தொழிலில் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் எளிதில் வெற்றி பெற முடியும். இது மட்டுமன்றி வேறு சில பிசினஸ் டிப்ஸ்களையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருங்கள். அதனை எவ்வாறு உங்கள் தொழிலில் கொண்டுவர முடியும் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். இது உங்கள் தொழிலை மென்மேலும் வளர்க்க உதவியாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+