இன்று கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தாத நபர்களை பார்ப்பதற்கு அரிதாக உள்ளது. அந்த அளவுக்கு கிரெடிட் கார்டுகள், நம் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிட்டன. என்னதான் வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமானதால், அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டுப் போகும் அபாயம் அதிகரித்து வருகின்றன. ஆகையால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது பாதுகாப்பாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு சில முக்கிய விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். அவை என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாத்தல்: உங்கள் கிரெடிட் கார்டு நம்பர், காலாவதி தேதி, CVV நம்பர் போன்ற முக்கிய விவரங்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.

ஆன்லைன் கணக்குகளுக்கு ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துதல்: உங்களுடைய ஆன்லைன் கணக்குகளுக்கு ஸ்ட்ராங் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும். சிலர் "1234" அல்லது "Qwerty" போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் தங்களுடைய "டேட் ஆஃப் பர்த்" விவரங்களை பாஸ்வேர்டாக பயன்படுத்துவார்கள். அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் "Password" என்பதையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவார்கள். இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது.
பப்ளிக் Wi-Fi இணைப்புகளைத் தவிர்க்கவும்: பப்ளிக் Wi-Fi இணைப்புகள் பாதுகாப்பற்றவை, எனவே அவற்றைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டாம். சில நேரங்களில் மோசடிக்காரர்கள் Wi-Fi நெட்வொர்க்கை பயன்படுத்தியும் உங்களுடைய பின் நம்பர் மற்றும் இதர வங்கி சார்ந்த விவரங்களை திருடலாம். எனவே எப்பொழுதும் உங்களுடைய மொபைல் நெட்வொர்க்கை மட்டுமே பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
கிரெடிட் கார்டு அறிக்கையை வழக்கமாக சரிபார்க்கவும்: உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையை ஒவ்வொரு மாதமும் கவனமாக சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனை நடந்தது போல் உங்களுக்கு தோன்றினால் உடனே உங்கள் கார்டு வழங்குனரை தொடர்பு கொள்ளவும்.
கிரெடிட் கார்டை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் கிரெடிட் கார்டை இழந்தால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். சிலர் தாங்கள் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை அப்படியே மறந்து விட்டு வந்து விடுவார்கள். இது போன்ற நபர்கள் சற்று பாதுகாப்பாக தான் கிரெடிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
கிரெடிட் கார்டு PIN-ஐ யாருக்கும் தெரிவிக்காதீர்கள்: உங்கள் கிரெடிட் கார்டு PIN-ஐ யாருக்கும் தெரிவிக்காதீர்கள்.
தொலைபேசி மூலம் கிரெடிட் கார்டு விவரங்களை வழங்க வேண்டாம்: உங்கள் நம்பரை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டால் சற்று உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் எந்த வங்கியோ அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்களோ உங்களிடம் இது போன்ற விவரங்களை கேட்காது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கவனமாக இருக்கவும்: பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய வேண்டும். இணையதளத்தின் URL ஆரம்பத்தில் https:// என்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். https என்பதில் s என்பதற்கு "Secured" என்பது பொருள்.
ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்துவிட்ட காரணத்தினால், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications