பர்சனல் லோன், ஆட்டோமொபைல் லோன், வீட்டு லோன், சொத்துகள் மீதான அடமானக் கடன், தொழில் கடன், கல்விக்கடன் போன்ற மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கப்படும் நகைக்கடன்களில் பல வகையான நன்மைகள் உள்ளன.
இந்தியர்கள் எல்லாரிடத்திலுமே சிறிதளவு நகைகள் கட்டாயம் இருக்கும். எதிர்பாராத குடும்பச் செலவு, அவசர மருத்துவச் செலவு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உடனடியாக தங்களிடமுள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிச் செலவுகளை சமாளிப்பார்கள்.

தேசிய வங்கிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளும் தங்க நகைக் கடன்களை விரைவாகவும் எளிதாகவும் வழங்குகின்றன. இந்த தங்க நகைக் கடன்களில் உள்ள நன்மைகள் பற்றி இங்கு விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தங்க நகைக் கடன்கள் குறுகிய காலத் தேவைகளுக்காகத் தான் பெரும்பாலும் பெறப்படுகின்றன. தங்க நகைக் கடன்களுக்கு மற்ற கடன்களை விட குறைந்த வட்டி விகிதமே வசூலிக்கப்படுகிறது. காரணம் உத்தரவாதத்துக்காக நகைகள் தரப்படுகிறதல்லவா.
தங்க நகைகளால் எந்த வருமானமும் இல்லாவிட்டாலும் ஆத்திர அவசரத்துக்கு உடனடியாக கடன் வாங்குவதற்கு தங்க நகைகள் மிகச் சிறந்தவையாகும். தங்க நகைக்கடன்களை வைத்து அதில் கிடைக்கும் பணத்தை எந்த காரணத்துக்காகவும் செலவு செய்யலாம்.
கடன் வாங்கும்போது அடமானமாக வைக்கப்படும் தங்க நகைகள் வங்கிகள் அல்லது கடன் தரும் நிறுவனங்கள் வசம் மிகவும் பத்திரமாக இருக்கும். கொள்ளை போனாலும் இழந்த நகையை மீட்பதற்கு இன்சூரன்ஸ் வசதி உள்ளது.
அடமானம் வைத்திருக்கும் காலத்தில் தங்கத்தின் விலை உயரும்பட்சத்தில் அதன் மீது கூடுதல் கடனை வாங்கி அடமானத்தொகையில் சேர்ந்திருக்கும் வட்டியைக் கழித்து டாப்-அப் செய்யும் வசதியும் இந்த கடனில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications