கொரோனா வைரஸ் பாரபட்சம் இல்லாமல் பலரையும் பாதித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
வங்கியில் நிம்மதியாக ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) போட்டு வைத்துக் கொண்டு, அதில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சொல்லலாம்.
இப்போது அவர்கள் எங்கு எந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.
ஒப்பீடுகள்
எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழ் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) கொடுத்திருக்கும் வட்டி விகிதங்களை, அதே 2 கோடி ரூபாய்க்கு ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் என்ன வட்டி விகிதங்கள் கொடுக்கிறார்கள் என ஒப்பிடப் போகிறோம். இந்த வட்டி விகிதங்கள் 60 வயதுக்கு உட்பட்ட சாதாரண குடிமகன்களுக்கு மட்டுமே பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்களை இதில் ஒப்பிடவில்லை.
வட்டிக் குறைப்பு
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடந்த 28 மார்ச் 2020 அன்று தான் தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதே போல ஹெச்டிஎஃப்சி வங்கியும் கடந்த 18 மார்ச் 2020 அன்று தான் தன் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஏப்ரல் 2020 நிலவரப்படி கொடுத்து இருக்கிறோம் எனச் சொல்கிறார்கள். ஆனால் அந்த லிங்கை சொடுக்கினால் 18-02-2020 அன்றைய வட்டி விகிதங்கள் தான் வருகின்றன. ஆனால் URL லிங்கில் 02-04-2020 அன்றைக்கான தேதி தான் இருக்கிறது. எனவே அது ஆக்ஸிஸ் வங்கியின் புதிய வட்டி விகிதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
1 - 2 வருடம் FD Interest rate
எஸ்பிஐ 1 - 2 வருடத்துக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு (Fixed Deposit) புதிய வட்டி விகிதங்கள் படி 5.7 % தான் வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி தன் 1 - 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) 6.15 % வட்டி கொடுக்கிறார்கள். ஆக்ஸிஸ் வங்கியோ 6.40 - 6.50 % வட்டி கொடுக்கிறார்கள்.
2 - 3 வருடங்கள் FD Interest rate
இதிலும் ஆக்ஸிஸ் வங்கி தான் அதிகம் வட்டி கொடுக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி 2 - 3 வருடம் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.50 % வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி 6.25 % தான் வட்டி கொடுக்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதை விட மிகக் குறைவாக 5.70 % தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
3 - 10 வருடம் FD Interest rate
இந்த நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களான 3 - 10 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு, ஆக்ஸிஸ் வங்கி 6.50 % வட்டி கொடுக்கிறது. ஆனால் ஹெச் டி எஃப்சி வங்கி 6.15 % தான் வட்டி கொடுக்கிறது. எஸ்பிஐ தரை தட்டும் விதத்தில் 5.7 சதவிகிதம் தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தேர்வு செய்யுங்கள்
ஆக எது அதிக வட்டி கொடுக்கிறது என்பதை நாங்கள் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டோம். இப்போது எந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால் உங்களுக்கு எவ்வளவு ஆண்டு வருமானம் வரும் என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல வருமானம் கொடுக்கக் கூடிய FD திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications