வங்கி வட்டியை விட அதிகமா.. அதிக வட்டி தரும் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள்.. எந்த நிதி நிறுவனம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன தான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், பல புதிய திட்டங்கள் இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்று முதலாவது ஆப்சனாக இருப்பது வங்கி டெபாசிட் தான் அல்லது பிக்ஸ்ட் டெபாசிட் தான்.

 

ஏனெனில் முதலில் நாம் நினைப்பது நம் முதலீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்பதே. அது வேறு எந்த முதலீட்டினை விடவும் வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக இருப்பது தான் சிறந்ததாக நினைக்கிறோம்.

இதனையடுத்து நாம் பெரிதும் எதிர்பார்ப்பது வட்டி விகிதம். எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம், அதாவது வங்கிக்கு நிகரான நிதி நிறுவனங்கள் அதிக வட்டி விகிதத்தினை கொடுக்கின்றன என்று தான்.

யாருக்கு இந்த திட்டம்?

யாருக்கு இந்த திட்டம்?

ஆனால் எதனை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியாமலேயே பலரும் குறைந்த வட்டியில், தங்களது பகுதியில் இருக்கும் வங்கிகளிலோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து விட்டு, பின்னர் வருத்தப்படுவது உண்டு. ஆக இன்று அப்படி நினைப்பவர்களுக்கானது தான் இந்த கட்டுரை.

எந்த வங்கி? எவ்வளவு வட்டி?

எந்த வங்கி? எவ்வளவு வட்டி?

ஏனெனில் வங்கிகளுக்கு நிகராக வட்டி விகிதத்தினை தரும் நிதி நிறுவனங்கள் பல உண்டு. அவற்றில் இன்று நாம் பார்க்க விருப்பது, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட், பஜாஜ் பைனான்ஸ், மகேந்திரா பைனான்ஸ், யெஸ் பேங்க் வட்டி விகிதம் தான். இந்த நிறுவனங்கள் 7%க்கும் அதிகமாக வட்டியினை வழங்கி வருகின்றன.

வட்டி குறைப்பு
 

வட்டி குறைப்பு

நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்து வரும் நிலையில், வங்கிகள் டெபாசிட், நிலையான வைப்பு நிதிகளுக்கும் வட்டியினை குறைத்து வருகின்றன, எனினும் இன்றளவும் மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தினை சில நிதி நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட்

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட்

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட் டெபாசிட் வட்டி விகிதமானது AAA என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 1 லட்சம் ரூபாய் சேமிப்புக்கு, 7 சதவீத வட்டி விகிதத்தினை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அவசர காலங்களில் உங்களது சேமிப்பு கணக்குகளில் இருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை பெற்றுக் கொள்ள முடியும். அது நிலையான வைப்பு தொகை போல ஒரே மாதிரியாக இருக்காது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கிறது.

பஜாஜ் பைனான்ஸில் வட்டி விகிதம்

பஜாஜ் பைனான்ஸில் வட்டி விகிதம்

பஜாஜ் பைனான்ஸிம் கூட கிட்டதட்ட 7 சதவீத வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றது. 36 முதல் 60 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு, நீங்கள் 7.10 சதவீத வட்டி விகிதத்தினை பெறுவீர்கள். இது AAA மதிப்பிடப்பட்ட நிலையான வைப்பு மற்றும் பஜாஜ் குழுவின் ஒரு பகுதியாகும். இங்கு குறைந்தபட்ச வைப்பு தொகை 25,000 ரூபாயாகும்.

மகேந்திரா பைனான்ஸ் வட்டி விகிதம்

மகேந்திரா பைனான்ஸ் வட்டி விகிதம்

Dhanvruddhi Cumulative and Non-Cumulative Scheme திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இதனை முதலீட்டாளர்கல் மகேந்திரா நிதி வலைத்தளம் வழியாக ஆன்லைனிலும் முதலீட்டாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இங்கு 40 மாத டெபாசிட்டுக்கு கிட்டதட்ட 8 சதவீத வட்டியினை பெறலாம்.

யெஸ் வங்கியில் வட்டி

யெஸ் வங்கியில் வட்டி

மகேந்திரா பைனான்ஸில் 27 மாதங்களுக்கு 7.05 சதவீத வட்டி விகிதமும், இதே 40 மாதங்களுக்கு 7.30 சதவீதமாகவும் உள்ளது. இதே 33 மாதங்களுக்கு 7.20 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதே தனியார் வங்கியான யெஸ் வங்கியில் 2 முதல் 3 ஆண்டுகளுக்கான வைப்புதொகைக்கு வட்டி விகிதமானது, 7% வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FD rates: Here the best deposit higher interest rates than bank fixed deposits

IDFC first savings bank account, bajaj finance, Mahindra finance, yes banks are offer higher interest rates than bank FDs.
Story first published: Wednesday, August 5, 2020, 10:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X