இன்றைய காலகட்டத்திலும் சிறந்த முதலீடாக கருதப்படுவது வங்கி டெபாசிட்கள் தான். அதாவது எஃப்டி எனப்படும் நிலையான வங்கி வைப்பு நிதிகள் தான்.
என்னதான பல முதலீட்டு திட்டங்கள் வந்தாலும்., இன்றும் பலரின் விருப்பமாக இருப்பதும் இந்த நிரந்தர வைப்பு நிதிகள் தான்.
ஏனெனில் முதலாவது பாதுகாப்பு, இரண்டாவது நிலையான வருமானம் இப்படி மக்களுக்கு தேவையானதை கொடுக்கும் பட்சத்தில், இதுவே மக்களின் முதல் சிறந்த ஆப்சனாக உள்ளது.
டெர்ம் டெபாசிட் கணக்கு
இந்த நிலையான வைப்பு தொகை திட்டங்கள் எல்லா வங்கிகளிலும் இருந்தாலும். வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடுகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க விருப்பது டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு என்பது தான். ஏற்கனவே சேமிப்பு கணக்கு உள்ள வங்கிகளில் நீங்கள் டெர்ம் டெபாசிட் கணக்கினை திறந்து கொள்ளலாம். இதே சேமிப்பு கணக்கு இல்லாமல் நிரந்தர வைப்பு நிதியினை வைக்க உங்கள் வங்கி அனுமதித்தால், கேஒய்சி-செயல்பாட்டுக்கு உட்படுத்தபடும்.
என்னென்ன ஆவணங்கள்?
இதற்காக உங்களிடம் உங்கள் கையெழுத்திடப்பட்ட அடையாள அட்டை பான் கார்டு உள்ளிட்ட ஆதாரங்கள், மற்றும் முகவரிக்காக ஆதார் கார்டு இதோடு, உங்களது போட்டோ கேட்கப்படலாம். இதனை சரி பார்க்க உங்களது ஒரிஜினல் ஆதாரங்களையும் காண்பிக்கப்பட வேண்டியிருக்கும்.
மினிமம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?
இந்த நிலையான வைப்பு தொகையில் எவ்வளவு குறைந்தபட்சம் சேமிக்கலாம் என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இதே அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை. ஆக நீங்கள் எவ்வாளவு வேண்டுமானாலும் வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்சம் & அதிகபட்சம் காலவரம்பு
வங்கிகளில் வைப்பு நிதியின் காலத்தினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் & அதிகபட்சம் காலவரம்பு என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும். வழக்கமாக 7 நாட்கள் முதல் கொண்டு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையில் நீங்கள் இந்த நிலையான வைப்பு தொகையினை வைத்துக் கொள்ளலாம். ஆக உங்களின் தேவைக்கு ஏற்ப எவ்வளவு காலங்களில் வேண்டும் என்பதனை நீங்களே தீர்மானம் செய்து தேர்வு செய்து கொள்ளலாம்.
சிறந்த 5 வங்கிகளில் நிரந்த வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் (காலம்- 1 வருடம்)
| வங்கி பெயர் | வட்டி விகிதம் | ரூ.10,000 டெபாசிட் எனில் வளர்ச்சி |
|---|---|---|
| ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் | 7.25% | ரூ.10,744.95 |
| ஆர்பிஎல் வங்கி | 7.20% | ரூ.10,739.67 |
| இந்தஸிந்த் வங்கி | 7.00% | ரூ.10,718.59 |
| உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி | 6.95% | ரூ.10,713.32 |
| டிசிபி வங்கி | 6.75% | ரூ.10,692.28 |
காலம் - 2 வருடம்
| வங்கி பெயர் | வட்டி விகிதம் | ரூ.10,000 டெபாசிட் எனில் வளர்ச்சி |
|---|---|---|
| ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் | 7.25% | ரூ.11,545.40 |
| ஆர்பிஎல் வங்கி | 7.25% | ரூ.11,545.40 |
| டிசிபி வங்கி | 7.20% | ரூ.11,534.06 |
| இந்தஸிந்த் வங்கி | 7.00% | ரூ.11,488.82 |
| உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி | 7.00% | ரூ.11,488.82 |
காலம் - 3 வருடம்
| வங்கி பெயர் | வட்டி விகிதம் | ரூ.10,000 டெபாசிட் எனில் வளர்ச்சி |
|---|---|---|
| ஆர்பிஎல் வங்கி | 7.50% | ரூ.12,497.16 |
| டிசிபி வங்கி | 7.35% | ரூ.12,442.07 |
| ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் | 7.25% | ரூ.12,405.47 |
| ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி | 7.25% | ரூ.12,405.47 |
| இந்தஸிந்த் வங்கி | 6.75% | ரூ.12,223.93 |
காலம் - 5 வருடம்
| வங்கி பெயர் | வட்டி விகிதம் | ரூ.10,000 டெபாசிட் எனில் வளர்ச்சி |
|---|---|---|
| டிசிபி வங்கி | 7.35% | ரூ.14,393.11 |
| ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் | 7.25% | ரூ.14,322.61 |
| ஆர்பிஎல் வங்கி | 7.15% | ரூ.14,252.43 |
| ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி | 7.00% | ரூ.14,147.78 |
| இந்தஸிந்த் வங்கி | 6.75% | ரூ.13,974.99 |
இந்த தரவானது ஜூலை ETIG- யிலிருந்து எடுக்கப்பட்டது.(ஜூலை 9, 2020 நிலவரப்படி)
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications