FD -க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. மூத்த குடிமக்களுக்கான நல்ல திட்டம் தான்..!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் முதலீடுகள் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கான முதலீடு என்பது மிக மிக முக்கியமாகவும், அடிப்படை வாழ்வாதாரமாகவும் பெரும்பாலானோருக்கு உள்ளது எனலாம்.

காலம் முழுவதும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக, சிட்டு குருவியானது கூட்டை கட்டுவது போல சேர்த்து வைத்த பணத்தினை சேமிக்கும் போது ஒன்றுக்கு பல முறை யோசிக்க வேண்டும் அல்லவா?

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்று வரை மிக சிறந்த முதலீடாக பார்க்கப்படுவது வங்கி வைப்பு நிதி தான். அதாவது வங்கி டெபாசிட் தான்.

வாழ்வாதாரம் பாதிப்பு

வாழ்வாதாரம் பாதிப்பு

அதிலும் சமீப காலமாக வங்கி டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வரும் நிலையில், மூத்த குடிமக்களில் பலர் தங்களது அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக இது ஒரு கடிமான நேரம் ஒன்றே கூறலாம். ஏனெனில் ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைத்துள்ள நிலையில் வங்கிகள் படிப்படியாக வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.

மூத்த குடிமக்களுக்கான அதிக வட்டி

மூத்த குடிமக்களுக்கான அதிக வட்டி

எனினும் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகள் வைப்பு நிதி திட்டங்களில், கவர்ச்சிகரமான வட்டியை வழங்கும் சில திட்டங்கள் உள்ளன. சில வங்கிகள் இந்த திட்டத்தினை வழங்கி வருகின்றன. இந்த லிஸ்டில் ஐந்து தனியார் வங்கிகளும், இரண்டு ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும் 7% அதிகமாக வட்டியினை கொடுத்து வருகின்றன.

எந்தெந்த வங்கிகள்

எந்தெந்த வங்கிகள்

இந்த லிஸ்டில் ஆர்பிஎல் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, டிசிபி வங்கி, இந்தஸிந்த் பேங்க், யெஸ் பேங்க் உள்ளிட்ட தனியார் வங்கிகள் நல்ல வட்டி விகிதத்தினை கொடுத்து வருகின்றன. இதோடு ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பந்தன் வங்கி, கரூர் வைஷ்யா வங்கி உள்ளிட்டவை இந்த டாப் லிஸ்டில் உள்ளன.

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?


மூத்த குடிமக்களுக்கான 3 வருட வைப்பு நிதிகளுக்கு, ரூ.1 லட்சம் முதலீடு எனில் எவ்வளவு கிடைக்கும்.

ஆர்பிஎல் வங்கியில் 8% வட்டி விகிதம், 3 வருடங்களுக்கு ரூ.1,26,824 ஆக வளர்ச்சியடையும்
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி - 7.75% வட்டி விகிதம் - ரூ.1,25,895
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 7.75% வட்டி விகிதம் - ரூ.1,25,895
டிசிபி வங்கி - 7.45% வட்டி விகிதம் - ரூ.1,24,788
இந்தஸிந்த் வங்கி - 7.25% வட்டி விகிதம் - ரூ.1,24,055
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 7.00% வட்டி விகிதம் - ரூ.1,23,144
பந்தன் வங்கி - 6.85% வட்டி விகிதம் - ரூ.1,22,600
ஸ்டேண்டர்டு சார்டர்டு - 6.50% வட்டி விகிதம் - ரூ.1,21,341
கரூர் வைஷ்யா வங்கி - 6.35% வட்டி விகிதம் - 1,20,805

முன்னணி வங்கிகள் எவ்வளவு வட்டி?

முன்னணி வங்கிகள் எவ்வளவு வட்டி?

ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூன்று வருடங்களுக்கான வைப்பு தொகைக்கு முறையே 6% மற்றும் 5.85%, 5.70% வழங்கி வருகின்றன. இதுவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆப் பரோடா 5.80% மற்றும் 5.60% வட்டியை வழங்குகின்றன.

ஆக மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பாதுகாப்பான நிலையான வருமானம் கொடுக்கக் கூடிய திட்டங்களாக உள்ளது. எல்லாவற்றையும் விட பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+