பொதுவாக இன்றும் முதலீடு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது வங்கி வைப்பு நிதி தான். நாம் அதில் டெபாசிட் செய்திருக்கிறோமோ? இல்லையோ? ஆனால் பிக்சட் டெபாசிட் என்பது பாதுகாப்பான திட்டமாக அனைவர் தரப்பிலும் பார்க்கப்படுகிறது.
வட்டி குறைவாக இருந்தாலும் சந்தை அபாயம் என்பது இல்லை. நிலையான வருமானம் தரும் திட்டம். எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டிற்கு பங்கமில்லாத ஒரு திட்டமாகும்.
அதோடு தற்போது இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிப்பு
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 2 கோடி ரூபாய்க்குள்ளான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது 75 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிகரித்துள்ளது. இது தவிர சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
புதிய அறிமுகம்
இது தவிர 555 மற்றும் 999 நாட்களுக்கான சிறப்பு திட்டமானது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.75% மற்றும் 6.50% ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது.
பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி?
பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ரூ. 2 கோடிக்குள்
7 - 14 நாட்கள் - 3%
15 - 30 நாட்கள்- 3.25%
31 - 45 நாட்கள்- 3.25%
46 - 59 நாட்கள் - 4.25%
60 - 90 நாட்கள் - 4.25%
91 - 179 நாட்கள் - 4.50%
180 - 270 நாட்கள் - 5.25%
271 - 364 நாட்கள்- 5.25%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.15%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 6%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.75%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.75%
சிறப்பு திட்டங்கள்
callable option
555 நாட்கள் - 6.50%
999 நாட்கள் - 6.25%
Non callable option
555 நாட்கள் - 6.75%
999 நாட்கள் - 6.50%
சேமிப்பு கணக்குக்கு வட்டி விகிதம்
நவம்பர் 15 முதல் சேமிப்பு கணக்குக்கு வழங்கும் திட்டமாகும்
ரூ.10 கோடி வரையிலான வங்கி இருப்புகளுக்கு - வட்டி விகிதம் வருடத்திற்கு 2.90% ஆகும்.
சேமிப்பு கணக்குகளுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள சேமிப்பு கணக்கு இருப்புக்கு, 3% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
எதில் வட்டி அதிகம்
சில வங்கிகள் வட்டி விகிதத்தினை 7% மேலாக சில திட்டங்களுக்கு கொடுத்து வருகின்றன. ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி 3 வருட திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதத்தினை கொடுக்கிறது.
இதே பந்தன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் மூன்று ஆண்டு திட்டத்திற்கு 7% மேலாக வைப்பு நிதிக்கு வட்டி கொடுக்கின்றன. இது வட்டி அதிகமாக எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவினை விட அதிக வட்டி கொடுக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications