இந்தியாவில் சமீபத்திய காலமாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதனை தொடர்ந்து வங்கிகளும் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
இது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் கூட்டத்தில் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வைப்பு நிதி மற்றும் அஞ்சலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் என ஒப்பிடும்போது, எந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். முதலீட்டாளர்களுக்கு எது பயனுள்ள ஒன்றாக இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
வங்கி பிக்சட் டெபாசிட்
வங்கி வைப்பு நிதியானது வங்கிகள் நிர்ணயித்த காலத்திற்கு இருக்க வேண்டும்.இது 7 நாள் முதல் 10 வருடம் வரையில் வங்கிகள் கால அவகாசம் கொடுத்துள்ளன. இதற்கான வட்டி விகிதம் என்பது காலத்தினை பொறுத்து மாறுபடும்.
தற்போதைய நிலவரப்படி, ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வட்டி விகிதம் 7% வரையில் சாதரண மக்களுக்கு வட்டி கிடைக்கலாம். இதே மூத்த குடிமக்களுக்கு 7.5% ஆக கிடைக்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி & ஐசிஐசிஐ வங்கி
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பொது மக்களுக்கு வட்டி விகிதம் 7.25% வரையில் கிடைக்கும். இதே மூத்த குடிமக்களுக்கு 7.75% வரையில் வட்டி கிடைக்கும் எனலாம்.
இதே ஐசிஐசிஐ வங்கியில் வட்டி விகிதம் பொது மக்களுக்கு 7% வரையில் கிடைக்கும். இதே மூத்த குடிமக்களுக்கு 7.5% வரையில் வட்டி கிடைக்கும் எனலாம்.
பந்தன் வங்கி
பந்தன் வங்கியானது கடந்த பிப்ரவரி 7 அன்று அதன் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் முதிர்வு காலத்திற்கு 25 - 50% வட்டி அதிகமாக கிடைக்கலாம். இந்த மாற்றம் செய்யப்பட்ட திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது பிப்ரவரி 6ல் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்புக்கு பிறகு வட்டி விக்தம் பொது மக்களுக்கு வட்டி விகிதம் 8% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 8.5% வரையிலும் கிடைக்கும் எனலாம்.
சிறு சேமிப்பு திட்டங்கள்
பொதுவாக அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகம். வங்கி வைப்பு நிதிகளோடு ஒப்பிடும்போது அதிகம். அதோடு சந்தை அபாயமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு திட்டமாகவும் உள்ளன. சாமானிய மக்கள் எளிதில் அணுகக் கூடிய விதத்திலும் இந்த திட்டங்கள் உள்ளன. அதேபோல சிறியோர் முதல் பெரியவர்கள் வரையில் லாபகரமான ஒன்றாக உள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
- 1 வருட டைம் டெபாசிட் - 6.5%
- 2 வருட டைம் டெபாசிட் - 6.8%
- 3 வருட டைம் டெபாசிட் - 6.9%
- 5 வருட டைம் டெபாசிட் - 7%
- தேசிய சேமிப்பு பத்திரம் - 7%
- கிசான் விகாஸ் பத்திரம் - 7.2%
- பொது வருங்கால வைப்பு நிதி - 7.1%
- சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6%
- மாதாந்திர வருமான திட்டம் - 7.1%
- மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம் - 8%


Click it and Unblock the Notifications