ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் பணத்தை போடுபவர்கள் எந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது தெரியாமல் அவதிப்படுவார்கள். சில வங்கிகள் அதிக வட்டி கொடுத்தாலும் அதில் சில நிபந்தனைகள் வைத்திருக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் போட்டுபோட்டு வட்டியை கொடுக்கின்றன். அதேபோல், ஸமால் ஃபைனான்ஸ் வங்கிகளும் அதிக வட்டிகளை வாரி வழங்குகின்றனர். இது பொது வைப்பாளர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்துள்ளன. அந்த வகையில், டிசம்பரில் சில வங்கிகள் தங்களது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டிய மாற்றியுள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்
ஃபெடரல் வங்கி, ஆர்பிஎல் வங்கி,ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ், பேங்க் ஆஃப் மஹாராஷ்டரா மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவை தங்களது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. முதலீட்டாளர்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானத்தைப் பெற விரும்புபவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்து தங்கள் செல்வத்தை அதிகரிக்கலாம்.

ஆர்பிஎல் வங்கி:இந்த வங்கி பொது மக்களுக்கு 500 நாட்கள் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு, மூத்த குடிமக்களுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் 7.8 சதவீதம் மற்றும் 453-499 நாட்களுக்கு 8.3 சதவீதம் வழங்கும்.
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி:வங்கியானது 444 நாட்களுக்கான டெபாசிட்களுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை பொது குடிமக்களுக்கு வழங்குகிறது. இதற்கு, மூத்த குடிமக்களுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 445 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான காலத்திற்கான வட்டி விகிதங்கள் 8.10 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் வழங்கும்.
பெடரல் வங்கி:வங்கி 777 நாட்கள் கால FDகளுக்கு பொது குடிமக்களுக்கு 7.4 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.9 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. வட்டி விகிதங்கள் 50 மாத காலத்திற்கு ஒரே மாதிரியாக இருக்கும். 778 நாட்கள் முதல் 50 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.15 சதவீதம் மற்றும் 7.65 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
கர்நாடகா வங்கி:வங்கி தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ரூ.3 கோடி வரையிலான எஃப்டிகளுக்கு பொது வைப்பாளர்கள் 3.5% முதல் 7.5% வரை வட்டியை பெறுவார்கள், அதுவே மூத்த குடிமக்கள் 3.5% முதல் 8% வரை வட்டியை பெறுவார்கள். அதுவே 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா: இந்த வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு சாதாரண குடிமக்களுக்கு 2.7% முதல் 7.35% வட்டியை வழங்குகிறது. அதேபோல், சீனியர் சிட்டிசன்களுக்கு 2.75% முதல் 7.85% வட்டியை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications