வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. வருமான வரி கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்வது பல்வேறு நன்மைகளை அளிக்கும். இந்தியாவின் பழைய வரி நடைமுறைப்படி ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பவர்களும், புதிய வரி விகிதத்தின் படி ஆண்டு வருமான 3 லட்சத்துக்கும் மேல் இருப்பவர்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
அதேபோல ஓராண்டில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி இருந்தாலும், வெளிநாட்டு பயணத்திற்காக ஒரு ஆண்டில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தாலும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த 2021 ஆம் நிதி ஆண்டிலிருந்து ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரி சட்டத்தின் படி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த தொகை 10,000 ரூபாயாக இருந்தது.
அதிக வருமானம் ஈட்டுகிறீர்கள் ஆனால் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யவில்லை என்றால் பின்னர் வருமான வரித்துறையினரின் நோட்டீசுக்கும் விசாரணைக்கும் ஆளாக நேரிடும். இதனால் பல்வேறு அலைச்சல்கள் ஏற்படலாம்.
ஒருவேளை உங்களுக்கு டிடிஎஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் உரிய நேரத்தில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வது மூலம் அந்த தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்களுக்கு சில சமயங்களில் கூடுதல் வரி விகிதங்கள் விதிக்கப்படலாம். மேலும் வரி சலுகைகள் கிடைக்காமல் போகலாம். எனவே அதிகபட்ச வரி விலக்கினை பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் வரி கணக்கினை தாக்கல் செய்வது தான் சிறந்தது.
வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது என்பது உங்களது வருமானத்திற்கான ஒரு முக்கியமான சான்றாக அமைகிறது. நீங்கள் தொடர்ச்சியாக தாக்கல் செய்து வரும்போது பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதனை ஒரு முகவரி சான்றாக கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்யும்போது இதற்கு முன்பு நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு குறித்த விவரங்களையும் பதிவிட வேண்டும். அதன் அடிப்படையில் உங்களது வருமானம் உள்ளிட்டவற்றையும் உங்களது பயண செலவு ஆகியவற்றையும் கணக்கீடு செய்து தான் உங்களது விசா நடைமுறைப்படுத்தப்படும்.
சில நிறுவனங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குவதற்கு முன்பு உங்களது வருமான ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ததற்கான சான்றுகளை கேட்பார்கள். இதன் மூலம் உங்களது ஆண்டு வருமானம் கணக்கீடு செய்யப்பட்டு உங்களுக்கான டெர்ம் இன்சூரன்ஸ் தொகை கணக்கிடப்படும்.
கடன் விண்ணப்பம் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பம் போன்றவற்றுக்கும் பல்வேறு நிதி நிறுவனங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான ஆதாரங்களை கேட்கின்றன. இதன் அடிப்படையில் உங்களது கடன் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகள் செயலாக்கம் செய்யப்படுகின்றன.
எனவே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதில் பல்வேறு நன்மைகள் இருப்பதால் உரிய நேரத்தில் அதனை தாக்கல் செய்வது பின்னாளில் உங்களுக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications