2023 முடிய போகிறது.. 2024 ஆம் ஆண்டிலாவது 'இந்த' தவறை செஞ்சிடாதீங்க, ப்ளீஸ்..!

2023 ஆம் ஆண்டு முடியும் நேரத்தில் நாம் சற்றே நிதானித்து நமது நிதிநிலைமையைப் பற்றி சற்று யோசிக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் செய்த செலவுகள், வருவாய் ஆதாரம், பொருளாதார இலக்குகள் ஆகியவற்றை ஆராய்ந்து நமது நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நமது இலக்குகளை எதிர்வரும் ஆண்டில் எப்படி எட்டுவது என்பது குறித்தும் ஆராய வேண்டிய கட்டத்தில் இப்போது இருக்கின்றோம்.

புத்தாண்டில் நமது நிதி நிலைமையை துல்லியமாகக் கணித்து நம் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.

2023 முடிய போகிறது.. 2024 ஆம் ஆண்டிலாவது 'இந்த' தவறை செஞ்சிடாதீங்க, ப்ளீஸ்..!

தற்போதைய நிலைமையை நன்றாகக் கணித்து எந்த விஷயங்களில் நாம் அக்கறை செலுத்தி எதிர்காலத்தில் நாம் விரும்பும் சிறப்பான நிதிநிலைமையை அடையலாம் என்பதை கணக்கிடுவதற்கு இது சரியான தருணமாகும்.

இதற்கு உதவும் சில வழிமுறைகளையும் தவிர்க்க வேண்டிய பிழைகளையும் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. முதலீட்டுக்கான இலக்குகள் எதுவும் இல்லை - முதலீடு இலக்கு இல்லாமல் வாழ்க்கை நடத்துவதும் இல்லாத ஊருக்குக் குருட்டாம் போக்கில் பயணிப்பதும் ஒரே விஷயம் தான். புதுமையான வாய்ப்புகள் நமக்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்துவதற்கான சிறப்பான திறன் இருக்க வேண்டும். மாறாக நமக்குத் தகுந்த முதலீட்டு இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் அதைச் சென்றடைய உதவும்.

சொந்தமாக ஒரு வீடு வாங்குவதைவிட பணி ஓய்வுக்குப் பின்னர் உள்ள பாதுகாப்பான வாழ்க்கைக்கான சேமிப்பை செய்யத் தோன்றலாம். இந்த வாய்ப்புகளும் இலக்குகளும் அவரவர் வயதும், நிதிநிலைமையும் பொருத்து காலத்துக்கேற்ப அமையலாம்.

கட்டுப்படியான முதலீட்டு வாய்ப்புக்கேற்ப நமது இலக்கை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு வகை செய்யும் பங்கு வர்த்தகம், கடன் அளவு, பலதரப்பட்ட நிதி திட்டங்கள் ஆகியவற்றில் சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தைப் பொருத்தமட்டில் அவ்வப்போது காணப்படும் ஏற்றங்களைக் கண்டு சலனப்பட்டுவிடக் கூடாது. இதுபோன்ற குறுகிய கால உயர்வில் மயங்குவது பெருத்த அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முதலீடு செய்வதைக் கைவிட வேண்டும். எனவே குறிப்பிட்ட, கணிக்க முடியக்கூடிய, கட்டுப்படுயாகக்கூடிய, உண்மையான, சரியான தருணத்தில் எந்த முதலீட்டையும் செய்தால் பிழைக்கலாம்.

2. அவசரகால நிதித் தொகுப்பு பற்றிய சிந்தனையில்லாமை - வாழ்க்கையில் யாருக்கும் எதுவும் எந்த நேரத்திலும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நேரிடலாம். அதுபோன்ற சமயங்களில் உங்களிடம் அவசரகால நிதி இல்லாவிட்டால் அந்தச் சமயத்தில் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இதுபோன்ற அவசரகால நிலைமைகளை சமாளிப்பதற்கு எனத் தனியான சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற கடன்களைத் தவிர்த்து வாழ்க்கையை நிம்மதியாக எந்தச் சூழ்நிலையிலும் கழிக்கலாம்.

அதேவேளையில் அவசரகாலத் தேவைக்கென்று கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவற்றை நம்பியிருந்தால் அதற்கென ஒரு விலையை கட்டாயம் தர வேண்டும். இதற்கு முன்கூட்டிய சேமிப்பே புத்திசாலித்தனமாகும்.

3. சேமிக்கத் தவறுவதும் ரிட்டயர்மென்ட்டுக்கான முதலீட்டை செய்யத் தவறுவதும்- பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு சேமிப்பதைத் தள்ளிப்போடுவது மிகவும் தவறான செயலாகும். தாமதமான சேமிப்பு அதன் பெருக்கத்தை தாமதிக்கும். அத்துடன் இதுபோன்ற முதலீட்டின் முதிர்ச்சித் தொகை மிகவும் சொற்பமாக இருக்கும். முழுவதுமாகப் பிரயோஜனப்படாது.

ஒருவரது வயதைப் பொறுத்து இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகரிக்கும் என்பதால் லைப் இன்சூரன்ஸ் மட்டுமல்லாமல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் இளைய வயதிலேயே தொடங்குவது சாதுர்யமான செயலாகும். இதன் மூலம் எந்த வகை இன்சூரன்ஸாக இருந்தாலும் குறைந்த பிரீமியத்தில் கூடுதலான பலன்களைப் பெறலாம்.

ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டுக்கு அரசாங்கம் பல வரிச் சலுகைகளைத் தருகிறது. அதைத் தவற விட்டால் வரிச்சலுகையோடு உங்களது சேமிப்பில் ஒரு பங்கையும் இழக்க நேரிடும்.

4. வரிக் கணக்கீட்டை புறக்கணித்தல்- வரிக் கணக்கீட்டை தாமதிப்பதால் கணிசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் நிதி நிலைமையோடு மன நிம்மதியும் பாதிக்கப்படும். வரிக்கான காலக்கெடுவை தவறவிட்டால் தேவையற்ற அபராதம், தண்டங்களைச் செலுத்த நேரிடும். இது உங்களது வரிச்சுமையை அதிகரிக்கலாம். மாறாக சரியான நேரத்தில் வரிச்சலுகை வாய்ப்புகளை பயன்படுத்துவதால் அவசர கதியில் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கலாம். கூடுதல் வரி விதிப்பில் இருந்தும் தப்பலாம்.

5. இன்சூரன்ஸுக்கான தேவையை புறக்கணித்தல் - முன்னரே சொன்னது போல் எல்லாருக்குமே லைப் இன்சூரன்ஸும் ஹெல்த் இன்சூரன்ஸூம் மிகவும் அத்தியாவசியமான விஷயமாகும். உங்களது சம்பாத்தியத்தை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் இது நல்லது.

எதிர்பாராதவிதமாக நீங்கள் இறக்க நேரிட்டால் லைப் இன்சூரன்ஸ் உங்கள் குடும்பத்தாருக்கு வந்து கைகொடுக்கும். நீங்கள் விட்டுச் சென்ற கடன், குடும்பச் சுமைகளை சமாளிக்க இந்தத் தொகை பெரிதும் உதவும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பானது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள், சிகிச்சைகள் போன்றவற்றை இந்த காப்பீடு மூலம் சமாளிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துக்கான செலவுத்தொகை அதிகரித்துவரும் நிலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் சரியான பாதுகாப்பு கேடயமாகும். எனவே இன்சூரன்ஸ் திட்டங்களை புறக்கணிப்பது சரியானதல்ல.

6. கடன்களை நீண்டகாலமாக வைத்திருத்தல் - முடிந்தவரையில் செலவுகளைச் சுருக்கி அதிகமான வட்டி செலுத்தும் கடன்களை முதலில் அடைக்க வேண்டும். அடுத்து பிற கடன்களை அடைக்க வேண்டும். சதாசர்வ காலமும் கடனுக்கு வட்டியை செலுத்திக் கொண்டே இருப்பது நல்லதல்ல. அது உங்களது சேமிப்பு வாய்ப்பை கெடுக்கும் செயலாகும்.

அப்படி கடன்களைச் செலுத்தும்போது உரிய கெடுவுக்குள் செலுத்துவதும் முக்கியமான செயலாகும். இதன் மூலம் அபராத வட்டிகளைத் தவிர்த்து அந்தப் பணத்தையும் சேமிக்கலாம். எப்படியிருந்தாலும் கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியையும் உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

இந்த ஆறு வழிமுறைகளைப் பின்பற்றி வரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில் பெரியதொரு ஏற்றத்தைக் காணுங்கள்.
வாழ்த்துகள்!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+