ஷார்ஜாஹ்: நாட்டிலுள்ள பல மாணவர்களின் கனவாக இருப்பது வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். வெளிநாட்டு கல்வி ஒரு மாணவருக்கு வளமான வாழ்க்கை மற்றும் அனுபவத்தை பெற்று தருவதாக நம்பப்படுகிறது. அதேபோல வெளிநாட்டில் படிப்பது உலகளாவிய வாய்ப்புகளை படிக்கும் மாணவருக்கு அதிகரிக்கிறது. ஆனால் அனைவருக்கும் வரும் கேள்வி என்னவென்றால்.. இந்தக் கனவை ஒரு நடுத்தர வர்க்க மாணவ/மாணவியால் சாதிக்க முடியுமா என்பது தான்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் 7.78 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று தங்களுடைய மேற்படிப்பை தொடங்கியுள்ளதாகவும், மற்றும் தொடர்ந்து உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் இந்திய மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இது ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் சாத்தியமாக வேண்டும் என்றால் சிறந்த நிதி திட்டமிடல் முக்கியம்.

சில மாணவர்கள் பெற்றோரின் பணத்திலோ அல்லது கல்வி கடன் பெற்றோ, வெளிநாடுகளுக்கு மேற்படிப்பை தொடர சென்று விடுவார்கள். ஆனால் அதோடு உங்களின் கடமை முடியாது. அதற்குப் பிறகு சில நிதி சார்ந்த யுக்திகளை, நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே, கல்விக்காக வாங்கிய கடன் மற்றும் அங்கு தங்கி படிப்பதற்கான செலவுகள் போன்றவற்றை திறம்பட நிர்வகிக்க முடியும்.
நீங்கள் வெளிநாட்டில் படிக்கும் மாணவ மாணவியராக இருந்தால் உங்களுக்கு நிதி திட்டமிடல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவற்றை நீங்கள் சரிவர நிர்வகித்தால் பெரிய இலக்குகளை அடைய முடியும்.
பட்ஜெட்: பட்ஜெட் என்பது நிதி திட்டமிடலின் முக்கிய அம்சமாகும். எனவே வெளிநாட்டில் படிக்கும் போது உங்களின் செலவுகள் குறித்த பட்ஜெட்டை உருவாக்கி, அதன்படி நடப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுடைய கல்விக் கட்டணம், தங்குமிடச் செலவுகள், தினசரி செலவுகள், பயணக் கட்டணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். மேலும் இந்த பட்ஜெட்டை பேப்பரில் எழுதி உங்கள் மேசையில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் அந்த டிராக்கில் தொடர்ந்து இருக்க முடியும்.
வங்கி கணக்கு: வெளிநாட்டில் படிக்கும் போது, அங்குள்ள வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை திறந்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து தேவைப்படும்போது பணத்தை பெறுவதற்கு அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கு, உங்களுக்கு வங்கி கணக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் படித்துக் கொண்டே ஏதேனும் பார்ட் டைம் வேலைகளில், சம்பளம் பெறவும் வங்கி கணக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சேமிப்புத் திட்டத்தை உருவாக்கவும்: உங்களுடைய பணத்தில் மிச்சம் இருப்பதை சேமிக்காமல், சேமித்த பிறகு மிச்சம் இருப்பதை செலவு செய்யுங்கள். வெளிநாட்டிலிருந்து படிக்கும் மாணவ மாணவியருக்கு இது போன்ற விஷயங்களை பின்பற்றுவதால், கல்விக் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும். மேலும், சேமித்த பணத்தை உங்களுடைய வருங்கால நிதி இலக்குகளை அடைவதற்கும் பயன்படுத்த முடியும்.
ஃப்ரீலான்ஸ் வேலைகள்: வெளிநாடுகளில் படிக்கும் பல மாணவர்கள் பார்ட் டைமாக வேலை செய்து கொண்டே படிக்கும் வசதியை பல நாடுகள் வழங்குகின்றன. மேலும், அதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல தொகையை சம்பளமாகப் பெற முடியும். இதனை வைத்து உங்கள் கல்வி கடனுக்கான வட்டி, அங்கு தங்கி இருக்கும் செலவு போன்றவற்றை, உங்கள் படிப்பு கெடாதவாறு செய்து கொள்ள முடியும்.
மாணவ மாணவியருக்கான தள்ளுபடிகள்: பல நாடுகள் மாணவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகின்றன. அவ்வாறு நீங்கள் வசிக்கும் நாட்டில், பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு உள்ள சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கவும், உங்கள் பட்ஜெட்டை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். எப்பொழுதும், வெளியில் செல்லும்போது உங்களுடைய ஐடி கார்டை எடுத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications