பொதுவாக இந்தியாவினை பொறுத்தவரையில் முதலீட்டு திட்டங்கள் பல ஆயிரம் இருந்தாலும், வருமானம் குறைவாக இருந்தாலும், அதிக நபர்களை ஈர்க்க கூடியது வங்கி டெபாசிட்கள் தான்.
சந்தை அபாயம் இல்லாத, நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதில் கூடுதலாக வரிச்சலுகையும் கிடைக்குமென்றால், இன்னும் சிறந்தொரு வாய்ப்பு தானே.
யாருக்கு ஏற்றது?
இது குறிப்பாக சந்தையில் புதியதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், மூத்த குடி மக்கள் என அனைவருக்கும் ஏற்ற திட்டமாக இந்த வங்கி பிக்சட் டெபாசிட்கள் உள்ளன.
அந்த வகையில் 5 வகையான பிக்சட் டெபாசிட்களை இன்று நாம் காணவிருக்கிறோம். இதற்கு எவ்வளவு வட்டி விகிதம் இதற்கு வரி சலுகை உண்டா வாருங்கள் பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.40%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.90%
இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 1, 2021ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
பஞ்சாப் சிந்த் வங்கி
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.30%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.80%
இந்த வட்டி விகிதமானது செப்டம்பர் 16, 2021ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
எஸ்பிஐ
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.30%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.80%
இந்த வட்டி விகிதமானது ஜனவரி 15, 2022ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
பேங்க் ஆப் பரோடா
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.25%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.75%
இந்த வட்டி விகிதமானது நவம்பர் 16, 2020ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
கனரா வங்கி
சாதாரண மக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.25%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - வருடத்திற்கு 5.75%
இந்த வட்டி விகிதமானது ஜனவரி 17, 2022ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
வரிச் சலுகை + வட்டி
மேற்கண்ட இந்த 5 பிக்சட் திட்டங்களுக்கும் வரிச்சலுகையும் உண்டு. அதிக வட்டி விகிதத்துடன், வரிச்சலுகையும் கிடைப்பது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications