சமீபத்திய மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பிக்சட் டெபாசிட்கள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.
பொதுவாக வங்கிகள் இந்த பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் வாங்கிக் கொள்ள வங்கிகள் சலுகையினை அளிக்கின்றன. இதன் மூலம் தனி நபர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடன் தொகையானது வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை பொறுத்து வழங்கப்படுகிறது.
கடன் தொகை
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிரான கடன் தொகையானது பொதுவாக, பிக்சட் டெபாசிட்களின் மதிப்பில் 70 - 90% கொடுக்கப்படலாம். இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம். இது ஒரு பாதுகாப்பான கடன் ஆகவும் பார்க்கப்படுகிறது. இந்த கடனை எளிதில் பெறலாம். இதன் செயல்பாடுகள் மிகவும் எளிது. இதற்கு எந்த செக்யூரிட்டி ஆவணமும் தேவையில்லை. அதேபோல மற்ற கடன்களுக்கு எதிராக கொடுப்பதை போல இதில் வருமான ஆதாரமும் தேவையில்லை.
கால அவகாசம்
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிரான கடனுக்கான கால அவகாசம் என்பது, பொதுவாக குறுகிய காலமாக இருக்கும். இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது 7 நாட்கள் முதல் 5 வருடங்களாக இருக்கலாம். எனினும் இதற்கென வங்கிகள் சில நிபந்தனை வைத்துள்ளன.
யாரெல்லாம் வாங்கலாம்?
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிரான கடனுக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை வங்கிகள், வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றது. பொதுவாக இதனை தனி நபர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
என்னென்ன ஆவணம்
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிரான கடனுக்கு குறைந்த ஆவணம் இருந்தாலே போதுமானது. தனி நபர்கள் இந்த டெபாசிட் திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட ரசீதினை கொடுத்தாலே போதுமானது. இதற்கான பார்மினை பதிவு செய்து, அடையாள ஆவணம் மற்றும் முகவரி ஆவணம் என அடிப்படை ஆவணங்களை கொடுத்தாலே போதுமானது.
மறுபடியும் செலுத்துதல்
பிக்சட் டெபாசிட்டுக்கு எதிராக வாங்கிய கடனை திரும்ப செலுத்துதலை மாதத் தவணையாக செலுத்திக் கொள்ளலாம். இது கடன் தொகையை பொறுத்து மாறுபடலாம். இதற்கான வட்டி விகிதம், கடன், கால அவகாசம் என பலவற்றை பொறுத்து மாறுபடலாம்.
முன் கூட்டியே செலுத்தலாமா?
வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டிற்கு எதிராக பெற்ற கடனை, முன் கூட்டியே அபராத தொகையுடன் செலுத்திக் கொள்ளலாம். இந்த அபராத தொகையும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
கடன் தொகை எப்படி?
எஃப்டிக்கு எதிராக கடன் என்பது சில தினங்களில் கிடைக்கும். இதற்கான ஒப்புதலும் சில நாட்களில் கிடைக்கலாம்.
எஃப்டியில் தாக்கம் எப்படி இருக்கலாம்?
எஃப்டிக்கு எதிரான கடன் தொகையானது பெற்றாலும், உங்களது எஃப்டிக்கு எதிராக வட்டி என்பதும் கிடைத்துக் கொண்டிருக்கும். எனினும் கடனுக்கான வட்டி விகிதத்தினை விட பிக்சட் டெபாசிட்டுகளுக்கான விகிதம் என்பது குறைவாகும்.
பிக்சட் டெபாசிகளுக்கான கடன் என்பது அவசரமாக நிதி தேவைப்படுபவர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதம் குறைவு. ஆவணங்களும் குறைவு. எனினும் தங்கள் நிதி நிலைமையை கவனமாக மதிப்பீடு செய்து, எஃப்டிக்கு எதிராக கடன் பெறுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications