சென்னை: நிஜாம் பாக்கு விளம்பரம் போல பெரியவர் முதல் சிறியவர் வரையில் அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டுத் திட்டங்களில், பிக்சட் டெபாசிட் முக்கியமான ஒன்று. இதனை டேர்ம் டெபாசிட் என்றும் கூறுவர்.
பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போல இல்லாமல் அபாயங்கள் குறைவாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. பல்வேறு வங்கிகள் 3 முதல் 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வழங்குகின்றன. இந்தப் பதிவில் பிக்சட் டெபாசிட்களுக்கு, வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்களைப் பற்றி பார்ப்போம்.

எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். எனவே பிக்சட் டெபாசிட்களை வழங்கும் வங்கிகளில், கொடுக்கப்படும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 பேசிக் பாய்ண்ட்கள்(bps) வழங்கப்படுகின்றன.
ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 6.80 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு, வங்கி 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (இவை ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான விகிதங்கள்): பஞ்சாப் நேஷனல் பேங்க், பிக்சட் டெபாசிட்களுக்கு, 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. குறிப்பாக, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு, வழக்கமான முதலீட்டாளர்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் ஒரு வருடத் திட்டத்தில் 7.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெற முடியும்.
ஐசிஐசிஐ பேங்க்: (ரூ. 5 கோடிக்கும் குறைவான டெபாசிட் மீதான விகிதங்கள்): ஐசிஐசிஐ பேங்க், FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களாக 3 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வழங்குகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் கூடுதல் 0.5 சதவீத வட்டியை பெற முடியும். மேலும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில், பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்களுக்கு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 6.70 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
HDFC பேங்க் FD விகிதங்கள்: HDFC வங்கி ஒரு வருட பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் 6.60 சதவிகித வட்டி விகிதத்தைப் பெறலாம். மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட்களில் 7.10 சதவிகித வட்டி விகிதத்தைப் பெற முடியும். குறிப்பிடத்தக்க வகையில், HDFC வங்கியானது 3 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, மேலும், இந்த வட்டி முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் முதிர்வு காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மேற்கண்ட வட்டி விகிதங்கள் காலாண்டிற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ மாறுபடலாம். எனவே, உண்மையான வட்டி விகிதங்களை அறிய அருகில் உள்ள வங்கி கிளைகளைப் பார்வை இடவும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications