ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் வணிக வாகன கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், கார் கடன்கள், வீட்டுக் கடன்கள், தங்கக் கடன்கள், தனிநபர் மற்றும் சிறு வணிகக் கடன்களை அளிக்கம் நாட்டின் மிகப்பெரிய ரீடைல் NBFC அமைப்பாக உள்ளது. 48 வருட பழமையான ஸ்ரீராம் குழுமத்தின், ஸ்ரீராம் பைனான்ஸ் ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீராம் பைனான்ஸ் Unnati Deposits என்ற திட்டத்தின் கீழ் இந்திய மக்களுக்கு வைப்பு நிதிக்கு 11 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை அளிக்கிறது.
இந்திய மக்கள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக நம்பும் முதலீட்டு திட்டங்களில் முக்கியமானது பிக்சட் டெபாசிட், அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு. இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளதால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜூப்லி டெபாசிட் திட்டத்தின் கீழ் புதிய Unnati Deposits திட்டத்தை அறிவித்துள்ளது. இப்புதிய திட்டம் இந்நிறுவனத்தில் புதிய மற்றும் ரினீவ் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும். 60 மாதம் முதிர்வு காலம் கொண்ட இந்த சிறப்பு டெபாசிட் திட்டம் மிகவும் குறைந்த காலக்கட்டத்திற்கு மட்டுமே இருக்கும். குறிப்பாக பெண் மூத்த குடிமக்கள் அதிகப்படியாக வருடத்திற்கு 10.99 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை பெற முடியும்.
60 மாதம் முதிர்வு காலம் கொண்ட ஸ்ரீராம் பைனான்ஸ் Unnati Deposits திட்டத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு 2 விதமாக வட்டி வருமானம் அளிக்கப்பட உள்ளது. Non-Cumulative Deposits அதாவது டெபாசிட் தொகைக்கான வைப்பு தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர முடிவில் பெற்றுக்கொள்வது. மற்றொன்று Cumulative Deposits அதாவது வட்டிதொகையை மறுமுதலீடு செய்து முதிர்வு காலத்தின் முடிவில் பெறுவது.
இவ்விரண்டுக்கும் வட்டி விகிதம் மாறுபடுகிறது. உதாரணமாக 25 வயதான ராகுல் என்பவர் ஸ்ரீராம் பைனான்ஸ் Unnati Deposits திட்டத்தில் 50 மாதம் முதிர்வு காலம் உடன் 5000 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். மாதந்தோறும் வட்டி பெறும் Non-Cumulative Deposit-க்கு 8 சதவீதம் மட்டுமே வட்டி, இதுவே Cumulative Deposits-க்கு 9.7 சதவீதம் வட்டி. முதிர்வு காலம் முடியும் போது 7,025 ரூபாய் கிடைக்கும்.

இதுவே பெண்கள் என்றால் 0.10 சதவீதம் கூடுதலான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது, மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீகம் கூடுதலான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது, பெண் மூத்த குடிமக்களுக்கு 0.60 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இதேபோல் பெண் மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் வட்டி பெறும் Non-Cumulative Deposit-க்கு 9 சதவீதம் வட்டி, இதுவே Cumulative Deposits-க்கு 11 சதவீதம் வட்டி. முதிர்வு காலம் முடியும் போது 5000 ரூபாய் டெபாசிட் தொகைக்கு 7,200 ரூபாய் கிடைக்கும்.
ஸ்ரீராம் பைனான்ஸ் Unnati Deposit திட்டத்தில் ஆப்லைன், ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்யலாம். ஆன்லைனில் முதலீடு செய்ய வேண்டுமெனில் இந்நிறுவன தளத்தில் மொபைல் நம்பர் கொண்டு ரிஜிஸ்டர் செய்யது, பான் மற்றும் முதலீட்டு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும், முதலீடு காலம், KYC, வங்கி விபரம் ஆகியவை கொடுத்து பேமெண்ட் செய்துவிட்டால், அடுத்த சில நொடியில் டெபாசிட் ரெசிப்ட் கிடைக்கும்.

More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications