பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசை தான், ஆனால் அதிக ரிஸ்க் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் கூட ரிஸ்க் இருக்கிறது. நமக்கு ஏத்த முதலீடுகள் என்றால் ஃபிக்ஸட் டெபாசிட் தான் என நினைக்கிறீர்களா?
உங்களுக்கான கட்டுரை தான் இது. பொதுவாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை எளிதாக வங்கிக்குச் சென்றோ அல்லது ஆன்லைன் வழியாகவோ சட்டென தொடங்கிவிடலாம்.
எனவே அதற்குள் போகாமல், எந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் எவ்வளவு வட்டி விகிதம் என்கிற விவரங்களுக்கு போவோம். இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியை விட கூடுதலாக வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் தேடிக் கொடுத்து இருக்கிறோம். ஒப்பீடு செய்து கொள்ள எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களையும் கீழே கொடுத்து இருக்கிறோம்.
எஸ்பிஐ FD வட்டி விகிதங்கள்
27-05-2020 முதல், பொது மக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days 2.9%
46 days to 179 days 3.9%
180 days to 210 days 4.4%
211 days to less than 1 year 4.4%
1 year to less than 2 year 5.1%
2 years to less than 3 years 5.1%
3 years to less than 5 years 5.3%
5 years and up to 10 years 5.4%
4 வகையான திட்டங்கள்
பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் கால அளவுக்குத் தகுந்தாற் போல மாறுபடும். 7 நாள் முதல் 10 வருடம் வரை, பல வங்கிகள் தங்களுக்குத் தகுந்தாற் போல ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வகுத்து வைத்து இருக்கிறார்கள். அதில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் ஆகிய நான்கு வகையான திட்டங்களை மட்டுமே பார்க்கப் போகிறோம். கீழே காணும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடுவார்கள்.
1 வருட FD திட்டங்கள் & வட்டி விகிதங்கள்
1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 7.25 % வட்டி கொடுக்கிறார்கள். 10,000 ருபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 1 ஆண்டு முடிவில் 10,745 ரூபாயாக வளர்ந்து இருக்கும்.
2. ஆர்பிஎல் பேங்க் 7.20 %
3. இண்டஸ் இண்ட் பேங்க் 7.00 %
4. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 6.95 %
5. டிசிபி பேங்க் 6.65 %
2 வருட FD திட்டங்கள் & வட்டி விகிதங்கள்
1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 7.25 % வட்டி கொடுக்கிறார்கள். 10,000 ருபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 2 ஆண்டு முடிவில் 11,545 ரூபாயாக வளர்ந்து இருக்கும்.
2. ஆர்பிஎல் பேங்க் 7.25 %
3. ஏ யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 7.00 %
4. இண்டஸ் இண்ட் பேங்க் 7.00 %
5. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 6.95 %
3 வருட FD திட்டங்கள் & வட்டி விகிதங்கள்
1. ஆர்பிஎல் பேங்க் 7.50 % வட்டி கொடுக்கிறார்கள். 10,000 ருபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டு முடிவில் 12,497 ரூபாயாக வளர்ந்து இருக்கும்.
2. ஏ யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 7.25 %
3. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 7.25 %
4. டிசிபி பேங்க் 6.95 %
5. இண்டஸ் இண்ட் பேங்க் 6.75 %
5 வருட FD திட்டங்கள் & வட்டி விகிதங்கள்
1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 7.25 % வட்டி கொடுக்கிறார்கள். 10,000 ருபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் 14,322 ரூபாயாக வளர்ந்து இருக்கும்.
2. ஆர்பிஎல் பேங்க் 7.15 %
3. ஏ யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 7.00 %
4. டிசிபி பேங்க் 6.95 %
5. இண்டஸ் இண்ட் பேங்க் 6.75 %
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications