வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் என இரு பிரபல முதலீட்டு திட்டங்களை அளிக்கின்றன. ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்துவமான நன்மைகள் உள்ளது. நமது நிதி தேவைக்கு ஏற்ப விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிக்ஸட் டெபாசிட், ரெக்காரிங் டெபாசிட் திட்டத்திலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன. நீங்கள் திட்டமிட்டு தேர்வு செய்யலாம். பல வங்கிகளின் திட்டங்களை கவனமாக ஒப்பிட்டு ஏதாவது ஒரு திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து வட்டி பலனுடன் திரும்ப பெறலாம். பிக்ஸட் டெபாசிட்டில் குறிப்பிட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு அது டெபாசிட் காலம் வரை மாறாமல் தொடரும்.
வட்டித் தொகை டெபாசிட் முதிர்ச்சி அடையும் காலத்தில் அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் வட்டியை பெறலாம். பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஒரு காலத்தில் முழுவதுமாக எடுத்து விடலாம்.
பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பணம் எடுக்கலாம் என்றாலும் அபராதங்கள் அல்லது வட்டி விகிதம் குறைப்பு ஆகியவை நடக்கும். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதாமாதம் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்.
பிக்ஸட் டெபாசிட் போலவே ரெக்கரிங் டெபாசிட்டுக்கும் குறிப்பிட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு டெபாசிட் காலம் வரை தொடரும்.
இந்த திட்டத்தில் மாதாமாதம் வட்டித் தொகை வரும். ஆனால் முதிர்ச்சி காலத்தின்போதுதான் முழுவதுமாக பணத்தை எடுக்க முடியும். முன்கூட்டியே பணத்தை எடுத்தால் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டமானது சிறிதுசிறிதாக முதலீடு செய்து எதிர்காலத்தில் தொடர்ச்சியான பலனைப் பெறுவது ஆகும்.
ஒவ்வொருவரது தேவையைப் பொருத்து நீங்கள் இந்தத் திட்டங்களை தேர்வு செய்யலாம். ஒரு பெரிய தொகையில் கணிசமான வரவை பெற விரும்பினால் அதற்கு பிக்ஸட் டெபாசிட் திட்டம்தான் சிறந்ததாகும்.
அதேவேளையில் தொடர்ச்சியான சேமிப்பு மூலம் வரவு பெற நினைத்தால் அதற்கு ரெக்கரிங் டெபாசிட் சிறந்ததாகும். வட்டி விகிதம், டெபாசிட் காலம், அபராதங்கள், பர்சனல் பைனான்ஸ் ஆகியவற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுவது நல்லது. அவர்கள் உங்கள் சூழ்நிலையை பார்த்து உங்களுக்கு ஒத்துப்போகக் கூடிய நல்ல முதலீட்டு திட்டங்களை பரிந்துரை செய்வார்கள்.


Click it and Unblock the Notifications