8.25% மேல் வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்! மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தேதிக்கு ஒரு வங்கி சுமாராக 6 சதவிகிதம் வட்டி கொடுத்தாலே பெரிய விஷயம் தான்.

 

அதுவும் ஆர்பிஐ கடந்த மார்ச் 2020-ல் 0.75 சதவிகிதம் ரெப்போ ரேட் குறைத்த பிறகும் 6 சதவிகிதத்துக்கு மேல் வட்டி கொடுக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை.

உதாரணமாக எஸ்பிஐ தன் 1 - 10 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு, சாதாரண குடிமக்களுக்கு 5.7 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கிறார்கள்.

பங்கு சந்தை சரிவை பயன்படுத்தி கொள்ள வேண்டுமா? மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!பங்கு சந்தை சரிவை பயன்படுத்தி கொள்ள வேண்டுமா? மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!

8 % மேல் கிடைக்குமா

8 % மேல் கிடைக்குமா

அப்படி என்றால் சில வருடங்களுக்கு முன்பைப் போல 8 சதவிகிதத்துக்கு எல்லாம் வட்டி கிடைக்காதா? அப்படிப்பட்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் இல்லையா என்று கேட்கிறீர்களா..? இருக்கிறது. 8.25 - 9.00 சதவிகிதம் வரை வட்டி கொடுக்கும் நான்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

ஸ்மால் ஃபனான்ஸ் பேங்க்

ஸ்மால் ஃபனான்ஸ் பேங்க்

இந்தியாவில பல வகையான வங்கிகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு வகையான வங்கி தான் இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க். இவர்கள் சாதாரண வங்கிகளைப் போல எல்லாமே செய்ய முடியும். ஆனால் எல்லாமே அளவில் கொஞ்சம் சிறியதாக இருக்கும் அவ்வளவு தான் எளிமையன வித்தியாசம். சரி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைப் பார்ப்போம்.

9.00 % வட்டி
 

9.00 % வட்டி

Fincare Small Finance Bank என்கிற வங்கி, 36 மாதம் முதல் 42 மாதங்கள் வரையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.00 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். அதே போல Utkarsh Small Finance Bank என்கிற வங்கியும் 777 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9.00 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள்.

8.25 % வட்டி

8.25 % வட்டி

Jana Small Finance Bank என்கிற வங்கி 1,555 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.25 % வட்டி கொடுக்கிறார்கள். Equitas Small Finance Bank என்கிற வங்கி 888 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.25 % வட்டி கொடுக்கிறார்கள். இதில் உங்களுக்கு சரிப்பட்டு வரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fixed deposits giving 8.25 percent Interest rates

RBI has reduced its repo rate 0.75 percent. After that so many banks has reduced its interest rates. But here we are giving fixed deposit plans which are giving 8.25 percent interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X