சூப்பர் வட்டி கொடுக்கும் பெரிய கம்பெனி FD திட்டங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை மட்டுமே நம்பி, இந்தியாவில் லட்சக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 5 - 10 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.4 % மட்டுமே வட்டியாக கொடுக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் பொருளாதார சூழலில், அதிகரித்து வரும் விலை வாசிக்கு மத்தியில், வெறும் 5.1 வட்டியை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியுமா? முடியவே முடியாது.

அதிக வட்டி யார் கொடுக்கிறார்கள்

அதிக வட்டி யார் கொடுக்கிறார்கள்

எந்த நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள், எஸ்பிஐ வங்கியை விட நல்ல வட்டியைக் கொடுக்கிறார்கள் என தேடிப் பிடித்து இருக்கிறோம். இந்தியாவின் பணவீக்கம் கடந்த ஜூன் 2020-ல் 6.09 %-மாக இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் 7 % வருமானம் கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இங்கு குறிப்பிட இருக்கிறோம்.

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்று பஜாஜ் குழுமம். இந்த பஜாஜ் குழுமம் கம்பெனிகளில் ஒன்று தான் பஜாஜ் ஃபைனான்ஸ். இந்த கம்பெனியில் ஆண்டுக்கு 7.10 % வரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி கொடுக்கிறார்கள். 5 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.

வட்டி விகிதங்கள்
 

வட்டி விகிதங்கள்

இந்த ஃபிக்ஸாட் டெபாசிட் வட்டி விகிதங்களை கடந்த 04 ஜூலை 2020 முதல் கொடுத்து வருகிறார்களாம். இது ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் Non Cumulative வட்டி விகிதங்கள்.

1. 12 - 23 மாதங்களுக்கு 6.9 %

2. 24 - 35 மாதங்களுக்கு 7.0 %

3. 36 - 60 மாதங்களுக்கு 7.1 % வட்டி கொடுக்கிறார்கள்.

மஹிந்திரா ஃபைனான்ஸ்

மஹிந்திரா ஃபைனான்ஸ்

பஜாஜ் குழுமத்தைப் போலவே, ஆட்டோமொபைல் தொடங்கி நிதி சேவைகள் வரை பல கம்பெனிகளை நடத்தும் குழுமம் மஹிந்திரா. மஹிந்திரா ஃபைனான்ஸ் கம்பெனியில் அதிகபட்சமாக, ஆண்டுக்கு 7.3 % வட்டி கொடுக்கிறார்கள். கீழே கொடுத்து இருக்கும் வட்டி விகிதங்கள், Dhanvruddhi Non-Cumulative ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மஹிந்திரா ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

மஹிந்திரா ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

இந்த வட்டி விகிதங்கள் அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரைக்குமான டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

1. 15 மாதங்களுக்கு 6.8 %

2. 20 மாதங்களுக்கு 7.0 %

3. 27 மாதங்களுக்கு 7.05 %

4. 33 மாதங்களுக்கு 7.2 %

5. 40 மாதங்களுக்கு 7.3 % என பல ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வைத்திருக்கிறது மஹிந்திரா ஃபைனான்ஸ்.

யெஸ் பேங்க்

யெஸ் பேங்க்

சமீபத்தில் தான் யெஸ் பேங்க், எல்லா விதமான சிக்கல்களில் இருந்தும் வெளியேறி வந்திருக்கிறது. இந்த வங்கி, சாதாரணமாக மற்ற வங்கிகள் கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை விட கூடுதலாக வட்டி கொடுக்கிறதாம். அதிகபட்சமாக 7.0 % வட்டி கொடுக்கிறது யெஸ் பேங்க். கீழே மொத்தமாக எல்லா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் & வட்டி விகிதங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

யெஸ் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

யெஸ் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

2 கோடி ரூபாய் வரைக்குமான டெபாசிட்களுக்கு மட்டுமே இந்த வட்டி பொருந்தும். 06 ஜூலை 2020 முதல் இந்த வட்டியைக் கொடுத்து வருகிறார்கள்.

7 to 45 days 5.0 %

46 to 90 days 5.5 %

3 months to < 6 months 6.0 %

6 months to < 9 months 6.5 %

9 months to < 1 Year 6.5 %

2 years < 3 years 7.0 %

1 Years to <= 10 years 6.75%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fixed deposits which give more than 7 percent interest rate to beat inflation

We have listed out the fixed deposits and its interest rates which give more than 7 percent interest rate to beat the June 2020 inflation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X