அடுக்குமாடி குடியிருப்பு Vs நிலம்: எந்த முதலீடு லாபம் தரும்? யாருக்கு எது பொருந்தும்?

இந்தியர்கள் மத்தியில் சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே குடியிருப்பதா என்ற குழப்பம் தற்போது அதிகரித்து இருக்கிறது . ஒருபுறம் பெற்றோர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் ரியல் எஸ்டேட் தான் லாபம் தருகிறது என கூறுகிறார்கள் மறுபுறம் முதலீட்டு ஆலோசகர்கள் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யுங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள் என அறிவுறுத்துகிறார்கள்.

பட்டய கணக்காளர் நிதின் கௌஷிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக விரிவாக பதிவு செய்திருக்கிறார் . அதில் இரண்டு விதமான நிகழ்வுகளை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு நபர் வீட்டு கடன் வாங்கி சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறார். இதற்காக மாதம் தோறும் அவர் 35 ஆயிரம் ரூபாயை இஎம்ஐ-ஆக செலுத்துகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பு Vs நிலம்: எந்த முதலீடு லாபம் தரும்? யாருக்கு எது பொருந்தும்?

மற்றொரு நபர் சொந்தமாக வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகை வீட்டிலேயே இருக்கிறார். மாதம் 10,000 ரூபாய் வாடகை செலுத்துகிறார். அவர் கடன் வாங்கி நிலம் வாங்குகிறார் இதற்கு மாதம் 20,000 ரூபாய் இஎம்ஐ செலுத்துகிறார். மேலும் மீதமுள்ள 5,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார்.

15 ஆண்டுகள் கழித்த பிறகு முதல் நபருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. ஆனால் நிலம் வாங்கிய நபருக்கு சொந்தமாக ஒரு நிலம் இருக்கிறது, அந்த ஐந்தாயிரம் ரூபாய் எஸ்.ஐ.பி 15 ஆண்டுகளில் அவருக்கு 1.2 கோடி ரூபாயாக வளர்ந்திருந்தது. இதில் இரண்டாவது நபர் தான் ஸ்மார்ட் ஆன முதலீட்டு முடிவுகளை எடுத்திருப்பவர் என குறிப்பிட்டு இருக்கிறார் .

அடுக்குமாடி குடியிருப்புகளை நாம் வாங்கும்போது நமக்கு நமக்கு வீட்டு வாடகை மிச்சம் ஆகிறது, நவீன வசதிகள் கிடைக்கிறது . ஆனால் அத்துடன் நமக்கு பெரிய அளவிலான கடன் வருகிறது என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம் என குறிப்பிடுகிறார். அதுவே நாம் நிலமாக வாங்குகிறோம் என்றால் நமக்கு தேவையான போது அந்த நிலத்தில் நமக்கு பிடித்தபடி வீட்டிலே கட்டிக் கொள்ளலாம். அடுக்குமாடி குடியிருப்புகளை விட நிலங்களின் மதிப்பும், விற்பனை மதிப்பும் அதிகமாக இருக்கிறது என்கிறார்.

இது தவிர நீங்கள் அந்த இஎம்ஐ தொகையை பிரித்து 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் போது உங்களுக்கு பெரிய அளவிலான வருமானம் கிடைக்கிறது. ஒரே ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிவிட்டு வேலை செய்யும் காலம் முழுவதும் கடனை அடைத்து கொண்டிருப்பதற்கு பதிலாக ரியல் எஸ்டேட் மற்றும் ஈக்விட்டி என சேர்ந்த முதலீடு செய்வது தான் சிறந்த முதலீடாக இருக்கும் என அறிவுரை வழங்குகிறார்.

ஏற்கனவே எனக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது , நான் தொடர்ந்து இந்த ஊரில் இதே இடத்தில் தான் இருக்க போகிறேன் மாத வாடகை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது என்பவர்கள் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பை வாங்கலாம். என்னிடம் எந்த ஒரு சொத்தும் இல்லை இனிமேல் தான் சேர்க்க வேண்டும் என்பவர்கள் இவர் சொல்வதை போல நிலம் மற்றும் எஸ் ஐபி ஆகிய இரண்டையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+