கொரோனாவினை மையப்படுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ்.. ரூ.159 பிரிமீயத்தில் ரூ.25,000 வரை க்ளைம் செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் நாம் எதிர்பாராத விதமாக ஏதும் அசம்பாவிதம் நேர்ந்தால், நம் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் அவர்களை காப்பாற்றுவது தான் இன்சூரன்ஸ்.

நாம் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் பொருளாதார ரீதியாக நம்மவர்கள் கஷ்டபடாமல் இருப்பார்களே. ஆக அங்கு தான் கைகொடுக்கிறது இன்சூரன்ஸ் திட்டங்கள்.

இந்தியா முழுவதும் வெறும் சுமார் 5% பேர் தான் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுள்ளதாக ஒர் அறிக்கை கூறுகிறது. ஆக அந்தளவுக்கு நம்மவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

வல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. வேலையின்மை சலுகை கோரி 3 வாரத்தில் 16.8 மில்லியன் பேர் விண்ணப்பம்..! வல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. வேலையின்மை சலுகை கோரி 3 வாரத்தில் 16.8 மில்லியன் பேர் விண்ணப்பம்..!

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

எனினும் தற்போது உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், உலகமே அரண்டு போய் கிடக்கிறது. ஆக இதுபோன்ற சூழலில் தான் மக்கள் இன்சூரன்ஸின் அவசியத்தினை புரிந்து கொண்டிருப்பார்கள். இதற்கிடையில் தான் ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றூம் ஐசிஐசிஐ லம்பார்டு மற்றும் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸினை கவர் செய்யும் விதமாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியினை உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் மக்கள் பயன் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பரிசோதனை தேவையில்லை

பரிசோதனை தேவையில்லை

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த பாலிசியினை நீங்கள் எடுக்க எந்த மருத்துவ பரிசோதனையும் செய்துகொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. தொழில் துறை மதிப்பீட்டின் கீழ் இந்திய மக்கள் தொகையில் 56% பேர் எந்தவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபோன்ற அசாதாரண சூழல்களில் இந்த பாலிசி உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

குறைந்த பிரிமியம்

குறைந்த பிரிமியம்

இந்த நிலையில் மேற்கூறிய கூட்டணிகள் அறிமுகப்படுத்தியுள்ள பாலிசி மூலம் 25,000 ரூபாய் வரை நன்மையை பெற முடியும் என்றும் இதன் ஆண்டு பிரிமீயம் வெறும் 159 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பாலிசி மூலம் கூடுதல் சுகாதார நன்மைகளை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

குரூப் இன்சூரன்ஸ்

குரூப் இன்சூரன்ஸ்

இது தவிர ஆம்புலன்ஸ் நன்மை உள்ளிட்ட பல நன்மைகளை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பிளிபாகார்டின் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் நகல்களை காப்பீட்டாளாரிடம் சமர்பித்தால் போதும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தினையும் அறிவித்துள்ளது.

என்னென்ன சலுகை

என்னென்ன சலுகை

குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சம் வரை க்ளைம் செய்து கொள்ள முடியுமாம். இதற்கு வருட பிரிமீயம் 511 ரூபாய் எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் அல்ல அறை வாடகையில் எந்த வரம்பும் இல்லை. ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான தொகையும் இந்த காப்பீட்டுத் தொகையில் பெற முடியும் எனவும், இன்னும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart and ICICI Lombard and Go Digit partnership launched coronavirus focused health insurance policy

Flipkart, ICICI Lombard and Go Digit General Insurance partnership launched health insurance policies on its platform that distinctly cover coronavirus pandemic. Its provides an instant Rs.25,000 benefit plan paid to the customer.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X