முதலீட்டுச் சந்தையில் எப்போதும் புதிய புதிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் டிரெண்டாகும், குறிப்பாகச் சந்தை மோசமாகச் செயல்படும் போது இத்தகைய புதிய முதலீட்டுத் திட்டங்கள் அதிக லாபம் கொடுத்தாலோ அல்லது சந்தை மோசமாகச் சரியும் போது புதிய முதலீட்டுத் திட்டத்தில் குறைவான சரிவு ஏற்பட்டாலும் இத்திட்டம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அப்படி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையில் இருக்கும் பணத்தை ரோடேட் செய்வதற்கும், பெரும் பணக்காரர்களின் குடும்ப முதலீட்டு அலுவலகங்களின் முதலீட்டை ஈர்க்கவும் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தற்போது HNI, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து மதிப்புடைய முதலீட்டாளர்கள் என இந்தியாவில் பல பணம் கொண்ட பலரின் விருப்பமான முதலீட்டு ஆயுதமாக மாறியுள்ளது இந்த Specialized Investment Funds.

2025ல் செபி உருவாக்கிய புதிய முதலீட்டுப் பிரிவு தான் இந்த SIF, இது மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கும் - பெரும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்-க்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட சிறப்பு முதலீட்டு வகை.
இதில் முதலீடு செய்வோக் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், இதை வழக்கம் போல் அசர்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நிர்வாகம் செய்யும்.
இந்த முதலீட்டு பிரிவில் முதலீட்டாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப லாங் ஷார்ட் இன்வெஸ்ட்மென்ட், செக்டார் ரோடேஷன், டைனமிக் அசர்ட் அலோகேஷன், மல்டி அசர்ட் இன்வெஸ்டிங் என முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
மியூச்சுவல் பண்ட் மேனேஜர்களுக்கு பணத்தை கையாளுவதில் பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளது. ஆனால் Specialized Investment Fund மேனேஜர்களுக்கு போர்ட்போலியோ முதலீட்டைக் கையாளுவதில் அதிகப்படியான சுதந்திரம் உள்ளது.
மேலும் எஸ்ஐஎப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தை, டெபிட், REIT, InvIT, கமாடிட்டி என பல திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச அளவு 10 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது மூலம், கொரோனா சரிவில் இருந்து பெரும் தொகையைச் சம்பாதித்த பலர் இத்திட்டத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளதாகவும், தற்போது இப்பிரிவில் 1 லட்சம் முதலீட்டாளர்கள் இருக்கும் வேளையில் மொத்த முதலீட்டு தொகை 40,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது என Edelweiss நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ராதிகா குப்தா தெரிவித்தார்.
இத்திட்டம் துவங்கி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில், துவக்கக்கட்டத்தில் மட்டுமே உள்ளது. மேலும் புதிய முதலீட்டு திட்டம் என்பதால் பல சிக்கல்கள் உள்ளது என்பதையும் உறுதி செய்த ராதிகா குப்தா, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை எப்படி பலன் அளிக்கிறது என்பதையும் விளக்கினார்.
மார்ச் மாதத்தில் சந்தை 10 - 11 சதவீதம் சரிந்த நிலையில், SIF திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட முதலீடுகள் வெறும் 1 - 2 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.
இதன் மூலம் இத்திட்டத்தின் வலிமையைப் பார்த்த முதலீட்டாளர்கள், இந்த ஆண்டு பப்ருச்சந்தை, பத்திர சந்தை இரண்டுமே பெரும் தடுமாற்றத்தையும், சரிவையும் சந்தித்த வேளையில் லாபம் பதிவு செய்வது என்பது இத்திட்டம் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார் ராதிகா.
மேலும் இத்திட்டம் குறித்த வலிப்புணர்வு அதிகரிக்கும் போது இத்திட்டத்திற்கு வரும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும், வேகமும் அதிகரிக்கும் என Edelweiss ராதிகா குப்தா தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications