கடனில் வெறும் ரூ.500 மிச்சமிருக்கிறதா? இதை கட்டாமல் விட்டால் அவ்வளவுதான்! சிபில் ஸ்கோர் காலி!

ஒரு சிலர் லட்சங்களில் கடன் வாங்கி இருந்தாலும் அதை சாதாரணமாக கட்டி முடித்து விடுவார்கள். ஆனால் அசலில் வெறும் 500 ரூபாய் மிச்சமிருந்தால் அதை கண்டுக்காமல் விட்டு விடுவார்கள். 500 ரூபாய் தானே இந்த சிறிய தொகையைக் கட்ட தவறினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று அசால்டாக இருக்கக் கூடாது. இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது. உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பொறுத்தவரையில் தொகை எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமே கிடையாது. கடன் தேதியை தாண்டி எத்தனை நாட்கள் தொகையை செலுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

மீண்டும் மீண்டும் சிறு தொகையை கண்டுக்காமல் விடுவதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும். உங்களுடைய ரீபேமெண்ட் ஹிஸ்டரியை வைத்து தான் கடன் வழங்குனர்கள் கடன் தரலாமா? அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிப்பார்கள்.

கடனில் வெறும் ரூ.500 மிச்சமிருக்கிறதா? இதை கட்டாமல் விட்டால் அவ்வளவுதான்! சிபில் ஸ்கோர் காலி!

இந்தியாவில் தனிநபரின் கிரெடிட் ஸ்கோரை மதிப்பிட TransUnion CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark போன்ற 4 முக்கியகள் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் தான் 300 முதல் 900 வரையிலான மூன்று டிஜிட் கொண்ட கிரெடிட் ஸ்கோரை அவரவரின் நிதி நிர்வாகத்தை பொறுத்து வழங்குகின்றன.

Also Read

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்களுக்கு எந்தக் கடன் வழங்கினாலும் சரி அதற்கு முன்னர் கிரெடிட் ஸ்கோரை தான் முதலில் பார்க்கும். ஒருமுறை தவறுதலாக 500 ரூபாய் என்ற சிறிய தொகையை செலுத்தாமல் விட்டால் உடனடியாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விடாது. ஆனால் நீண்ட நாட்கள் செலுத்தாமல் இருப்பதால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதாது.

நீங்கள் வாங்கிய கடனில் 500 ரூபாயை செலுத்தத் தவறி விட்டீர்கள். அப்படியானால் இனிமேல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

நிலுவையை உடனடியாக செலுத்துங்கள்: சிறு தொகையை செலுத்தாமல் விடுவதும் உங்கள் நிதி நலனுக்கு நல்லதல்ல. எனவே நிலுவையில் உள்ள கடனை தள்ளிப் போடாமல் உடனே செலுத்தி முடிக்க முயற்சி செய்யுங்கள்.

அபராதக் கட்டணத்தை சரிபாருங்கள்: 500 ரூபாயை நிலுவையில் வைத்திருந்தாலும் அதற்கும் வங்கிகள் தாமதக் கட்டணம், அபராதக் கட்டணம் இருக்கும். இவற்றையெல்லாம் சரி பார்த்து அதையும் முழுமையாக செலுத்துங்கள்.

கடன் முடிந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்துங்கள்: தொகையை செலுத்தி முடித்த பிறகு உங்கள் கணக்கில் பேலன்ஸ் எதுவும் இல்லை என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபாருங்கள்: கிரெடிட் ரிப்போர்ட்டில் ஏதாவது தவறான தகவல்கள் இருக்கிறதா? அல்லது நீங்கள் செய்யாத பரிவர்த்தனை இருக்கிறதா? என்பதையும் தவறாமல் சரி பாருங்கள்.

ரிமைண்டர் அமைத்துக் கொள்ளுங்கள்: மீண்டும் இதுபோல சிறு தவறு நடக்காமல் இருக்க ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பயன்படுத்தலாம் அல்லது ரிமைண்டர் அமைத்துக் கொள்ளலாம். மறந்து போன 500 ரூபாய் தொகை கூட பிற்காலத்தில் உங்களுக்கு பெரிய பிரச்சினையாக மாறிவிடும். அதுவும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு இது கனகச்சிதமாக பொருந்தும்.

ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டு கடனுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை வருடாந்திர வட்டி வசூலிக்கப்படுகிறது. அப்படியானால் நினைத்துப் பாருங்கள்.. 500 ரூபாயை மிச்சம் வைத்திருந்தாலும் அதற்கு வட்டி எவ்வளவு வரும் என்று.. உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆரோக்கியமாக பராமரிக்க கடன் தொகையை செலுத்துவதில் விழிப்புடன் இருங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+