FD வைத்திருப்பவர்கள் கவனிக்கவும்! உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் வியாபாரிகள், அலுவலகங்கள் எல்லாம், வியாபாரம் செய்ய முடியாமல் ஒரு வகையான பாதிப்புகளை எதிர் கொள்கிறார்கள்.

ஃபிக்ஸட் டெபாசிட்டின் வழியாக வரும் வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு வட்டி குறைவு போல வேறு வகையான சில பாதிப்புகளை எதிர்க் கொண்டு வருகிறார்கள்.

இப்படி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை நம்பி இருப்பவர்களுக்கு, வருமான வரித் துறை சில சலுகைகளைக் கொடுத்து இருக்கிறது தெரியுமா..?

ஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..!ஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..!

Form 15 G or Form 15 H

Form 15 G or Form 15 H

இந்த படிவங்களைப் பற்றி அவ்வப் போது செய்திகளில் கேள்விப்பட்டு இருக்கலாம். இந்த படிவங்களைச் சமர்பித்துக் கொடுத்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி வருமானங்களுக்கு டிடிஎஸ் பிடிக்கமாட்டார்கள். அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

யாருக்கு பொருந்தும்

யாருக்கு பொருந்தும்

பொதுவாக, இந்த ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வரும் வருமானத்தை மற்ற எல்லா வகையான வருமானத்துடன் சேர்த்தால், செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி 0-ஆக இருக்க வேண்டும். அவர்கள் இந்த படிவம் 15 ஜி & படிவம் 15 ஹெச் நிரப்பி டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெற முடியும்.

யாருக்கு Form 15 G

யாருக்கு Form 15 G

60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்தியாவில் வசிப்பவர், மொத்த ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கணக்கிட்டால் 0 ரூபாய் செலுத்த வேண்டியவர்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வரும் வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பை விட குறைவாக இருப்பவர்கள், இந்த படிவம் 15 ஜியை நிரப்பி, வட்டி கொடுக்கும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கொடுத்து டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெறலாம்.

யாருக்கு Form 15 H

யாருக்கு Form 15 H

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள், இந்தியாவில் வசிப்பவர், மொத்த ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கணக்கிட்டால் 0 ரூபாய் செலுத்த வேண்டியவர்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பை விட கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.. இவர்களுக்கு எல்லாம் இந்த படிவம் 15 ஹெச்-ஐ நிரப்பி, வட்டி கொடுக்கும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கொடுத்து டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெறலாம்.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

பொதுவாக இந்த Form 15 G / H-ஐ நிதி ஆண்டின் தொடக்கத்தில் கொடுப்பார்கள். அப்போது தான் அந்த நிதி ஆண்டில் இருந்து வரும் வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். இந்த 2020 - 21 நிதி ஆண்டில் Form 15 G / H கொடுக்க கடைசி தேதி ஏப்ரல் 30, 2020. ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த படிவங்களை முறையாக கொடுக்க முடியவில்லை.

ஜூன் 30, 2020

ஜூன் 30, 2020

எனவே, 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்த Form 15 G / H-ஐ கொடுத்து இருப்பவர்களின் அதே படிவத்தை, இந்த 2020 - 21 நிதி ஆண்டு ஜூன் 30, 2020 வரை கணக்கில் எடுத்துக் கொள்ள இருக்கிறார்களாம். இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கு, ஜூலை 2020 முதல் வாரத்துக்குள் Form 15 G / H-ஐ சமர்பிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

குறிப்பு: இதில் பொதுவான விஷயங்களையே குறிப்பிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு நபரும் யார் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறார்கள், அவர்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறாரா, HUF பெயரில் டெபாசிட் இருக்கிறதா, கம்பெனியா, சிறு நிறுவனமா என்பதைப் பொறுத்து, வருமான வரி விதிகள் மாறுபடலாம். எனவே உங்கள் ஆடிட்டரை அணுகி விரிவாக இதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Form 15 G Form 15 H submission date extended

Fixed depositors has to submit Form 15 G and Form 15 H to avoid TDS. The submission date extended to July 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X