இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் பிஎப் (பிராவிடன்ட் பண்ட்) கணக்கு வைத்திருப்பார்கள். இது ஓய்வுக்கால சேமிப்புக்கானது மட்டுமல்ல, ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் தருகிறது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய சலுகை உள்ளது - EPFO வழங்கும் இலவச காப்பீடு.
பிஎப் கணக்கு உள்ள அனைவருக்கும் ரூ.7 லட்சம் வரை லைப் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதைவிட முக்கியமான விஷயம் இந்த 7 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற கூடுதலாக எந்த பிரீமியமும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது கவனிக்க வேண்டியது. பிஎப் கணக்கு இருந்தாலே இந்த 7 லட்சம் தானாக கிடைக்கும்.

EDLI திட்டம்:
இந்த காப்பீடு EDLI (Employees' Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பிஎப் (EPF) மற்றும் பென்ஷன் (EPS) சலுகைகளுக்கு அடுத்தபடியாக EDLI மூன்றாவது முக்கிய சலுகையாக பிஎப் கணக்கின் வாயிலாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கிடைக்கிறது. இதற்கு எந்த படிவமும் நிரப்ப தேவையில்லை, பதிவு செய்ய தேவையில்லை.
பிஎப் கணக்கு இருந்தாலே போதும், தானாகவே இந்த காப்பீடு பொருந்தும். ஊழியர் எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் பணியாற்றும் நிறுவனமே ஊழியரின் ஊதியத்தில் 0.5 சதவீதத்தை EDLIக்கு செலுத்துகிறது. இது ஊழியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை.
காப்பீடு எப்போது கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்?
இந்த காப்பீடு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதால் இது ஊழியரின் குடும்பத்தை நிதி சுமையில் இருந்து பாதுகாக்கும் ஒரு கருவி. அலுவலகத்தில் விபத்து நடந்தாலும் சரி, விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது ஏற்பட்டாலும் சரி, சலுகை கிடைக்கும். இறந்த ஊழியரின் குடும்பத்தினர் அல்லது நாமினிக்கு நிதி உதவி வழங்கப்படும்.பிஎப் கணக்கு உள்ள அனைத்து ஊழியர்களும் இதைப் பெற தகுதியானவர்கள்.
காப்பீடு தொகை எவ்வளவு? எப்படி கணக்கிடப்படும்?
EDLI திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சமும், அதிகபட்சம் ரூ.7 லட்சமும் கிடைக்கும். இந்த தொகை ஊழியரின் கடைசி 12 மாத ஊதியம் மற்றும் பிஎப் இருப்பை வைத்து கணக்கிடப்படும். ஊதியம் மற்றும் பிஎப் இருப்பு அதிகமாக இருந்தால் காப்பீடு தொகையும் அதிகரிக்கும்.
பிஎப் கணக்கு என்பது ஓய்வுக்கால சேமிப்பு மட்டுமல்ல, குடும்ப பாதுகாப்புக்கான கருவியும் ஆகும். EDLI போன்ற சலுகைகள் பலருக்கும் தெரியாததால், அவற்றைப் பயன்படுத்துவதில்லை.
பிஎப் கணக்கு உள்ளவர்கள் இந்த இலவச காப்பீட்டைப் பற்றி தெரிந்துகொண்டு, நாமினி விவரங்களை சரியாகப் புதுப்பித்து வைத்திருப்பது நல்லது. இது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும். EPFO திட்டங்கள் ஊழியர்களுக்கு பல சலுகைகளை தருகின்றன, அவற்றை அறிந்து பயன்படுத்துவது அவசியம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications