நண்பனுக்காக ஜாமீன் கையெழுத்து போடலாமா? ஜாமின்தாரருக்கு இருக்கும் 4 சட்ட சிக்கல்கள் இதுதான்!

வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்தால் ஜாமீன் கையெழுத்து போட ஒருவரை கூட்டி வரச் சொல்வார்கள். கடன் பெறுபவர் லோனை சரியாக செலுத்தவில்லை என்றால் ஜாமின் கையெழுத்து போடுபவர் தான் அந்த கடனுக்கு பொறுப்பாவார் என்பதை தீர்மானிப்பதற்காக தான் இந்த நடைமுறை. இது கடன் வழங்குபவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது.

பெரும்பாலான நேரங்களில் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களே உங்களிடம் ஜாமின் கையெழுத்து போட சொல்லி கேட்டிருப்பார்கள். வெறும் கையெழுத்து தானே என்று நினைத்து நீங்கள் போட்டு விட்டால் பிற்காலத்தில் பல சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். சில நேரங்களில் இந்த முடிவு உங்கள் நட்பையே பாதிக்க கூடிய அளவுக்கு பெரிய விஷயமாக உருவெடுத்து விடும்.

நண்பனுக்காக ஜாமீன் கையெழுத்து போடலாமா? ஜாமின்தாரருக்கு இருக்கும் 4 சட்ட சிக்கல்கள் இதுதான்!

கடனுக்கு கேரன்டி கையெழுத்து போடுபவரே ஜாமின்தாரர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பெறுபவருக்கு குறைந்த வருமானம் அல்லது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கட்டாயம் வங்கிகள் ஜாமீன் கையெழுத்து போட ஒருவரை கேட்கும். ஆனால் கையெழுத்து போடுபவருக்கு சில சட்டப்பூர்வ பொறுப்புகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா ஒப்பந்தச் சட்டம் பிரிவு 128-இன் கீழ் கடன் பெறுபவர் கடனை சரியாக செலுத்தவில்லை என்றால் அதற்கான வட்டி, அபராதத் தொகை என கடன் முழுவதையும் சேர்த்து செலுத்த வேண்டிய பொறுப்பு ஜாமின்தாரருக்கு வந்து சேரும். எனவே ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு கையெழுத்து போடுவதற்கு முன்பு அதில் இருக்கும் ஆபத்துகள் என்னென்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Also Read

ஜாமின் கையெழுத்து போடுவதால் ஏற்படும் 4 முக்கிய பிரச்சினைகள்:

நீங்கள் கடன் பெற விண்ணப்பித்தால் பிரச்சனை: மற்றொருவரின் கடனுக்கு நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்டால் நீங்கள் கடன் வாங்கும் போது பிரச்சனை ஏற்படலாம். வங்கிகள் ஒருவருக்கு இவ்வளவு கடன் வழங்கலாம் என்று நிர்ணயித்திருக்கும். எனவே நீங்கள் வேறு ஒருவரின் கடனுக்கு கையெழுத்து போட்டால் அதையும் உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதனால் உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் கடன் கிடைக்காமல் போகலாம் அல்லது அதிக வட்டி விகிதத்தில் கடன் பெறும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

சட்ட சிக்கல்கள்: கடன் பெற்றவர் கடனை செலுத்தவில்லை என்றால் அந்த தொகையை மீட்க வங்கிகள் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். உதாரணமாக கடன் பெற்றவர் திடீரென மரணம் அடைந்து விட்டால் அல்லது கடனை செலுத்தத் தவறவிட்டால் கூட இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பொறுப்பில் இருந்து வெளியேறுவது கடினம்: ஒரு முறை ஜாமின் கையெழுத்து போட்டு விட்டால் அந்த கடனை அடைப்பதற்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். இதனால் கடன் கால முடியும் வரை அதிலிருந்து வெளியேறுவது கடினம். உங்களை விடுவிக்க வங்கிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு கடன் பெற்றவர் வேறு ஒரு ஜாமின்தாரரை கூட்டிச் செல்ல வேண்டும் அல்லது தங்கம் மற்றும் பிற சொத்துக்கள் போன்றவற்றை பிணையமாக வழங்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்: கடன் பெற்றவர் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இது குறித்து வங்கிகளும் ஜாமீன்தாரர்களுக்கு தெரிவிக்காது. எனவே நண்பருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன்பு அவருடைய நிதிநிலைமை எப்படி இருக்கிறது? அவர் கடனை சரியாக செலுத்துவிடுவாரா? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு கையெழுத்து போட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+