சென்னை: இந்தியாவில் முன்னணியில் இருக்கக்கூடிய பல்வேறு தொழில் குழுமங்களும் மார்வாடிகளுக்கு சொந்தமானவையாக தான் இருக்கின்றன். ஆதித்யா பிர்லா குழுமம், பஜாஜ் குழுமம், பிராமல் என்டர்பிரைசஸ் , ஆர்பிஜி குழுமம், ஜேகே குழுமம், வேதாந்தா , கோயங்கா, சிங்கானியா என வெற்றிகரமாக பல ஆண்டுகளாக தொழில் புரிந்தவரும் குடும்பங்களை எல்லாம் நாம் ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் அனைவருமே மார்வாடி பிரிவை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மக்கள் தொகையில் கணிசமான சதவீதத்தை கொண்டிருக்கும் மார்வாடிகள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்று எந்த தொழிலில் கால் பதித்தாலும் வெற்றி அடைகிறார்கள். இதற்கு சில விஷயங்களை அவர்கள் தவறாமல் கடைபிடிப்பது தான் காரணம்.

ஒவ்வொரு ரூபாயும் மூலதனம்: மார்வாடிகளை பொறுத்தவரை அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்பது மூலதனம். அதாவது அவர்களுக்கு வரக்கூடிய ஒவ்வொரு ரூபாய் வருமானமும் அடுத்த ஒரு தொழிலுக்கான மூலதனமாகவோ அல்லது முதலீடாகவோ தான் பார்ப்பார்கள். தங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்வது , வர்த்தகம் செய்வது முதலீடு செய்வது ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துவார்கள் .
நெட்வொர்க்கிங்: பாரம்பரியமாக வங்கிகள் வருவதற்கு முன்னதாகவே மார்வாடிகள் தங்களுக்கென சொந்தமான ஒரு நிதி வலை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் நெட்வொர்க்கிங் முறையில் மனிதர்களுடன் தொடர்பு கொண்டு நம்பிக்கை பெறுவதில் மார்வாடிகளை அடித்து கொள்ள முடியாது.

சிறுவயது முதலே தொழில்: தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தொழில் கற்று தருவார்கள். பிள்ளைகள் பதின்ம வயதை எட்டி விட்டாலே அவர்களை தங்களுடைய கடைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் அழைத்து சென்று விடுவார்கள் . எனவே அவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவதற்கு முன்னதாகவே ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்ற திறமைகளை பிராக்டிக்கலாக பெற்றுக் கொள்வார்கள். பணத்தை எப்படி கையாள வேண்டும் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என நேரடி பயிற்சி கிடைப்பதால் அவர்களுக்கு எம்பிஏ போன்ற பட்டப்படிப்பு எதுவும் தேவையில்லை.
தங்கம், நிலம் : மார்வாடிகளை பொருத்தவரை பணத்தை பெருக்குவதற்கான ஒரு கருவியாக தான் தங்களுடைய தொழில் மற்றும் பங்கு வர்த்தகத்தை வைத்திருப்பார்கள் .அந்த பணத்தை இறுதியில் நிலத்திலும் தங்கத்திலும் தான் முதலீடு செய்வார்கள். மார்வாடிகளின் கருத்துப்படி பங்குகள் , தொழில்கள் உள்ளிட்டவை பணத்தை வளர்க்கும் கருவிகள் ஆனால் நிலம் மற்றும் தங்கம் தான் தக்க வைக்க கூடிய சொத்துகள். இதனை தான் அடுத்த தலைமுறைக்கு நாம் எளிதாக கொடுத்துவிட்டு செல்ல முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
வாழ்க்கை முறை: மார்வாடிகளை பொறுத்தவரை தங்களிடம் பெரிய அளவு பணம் இருக்கிறது அதனை ஆடம்பரமான வாழ்க்கை மூலம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எண்ண மாட்டார்கள் . தங்களுக்கு வரக்கூடிய பணத்தை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை தொழிலிலோ அல்லது நிலத்திலோ தான் முதலீடு செய்வார்கள். எனவே ஆடம்பர வாழ்க்கை மூலம் பணம் வீணாக செலவு செய்ய மாட்டார்கள்.
குடும்பம்: மார்வாடிகளி எப்போதுமே கூட்டு குடும்பமாக ஒரு தொழிலை கவனித்து கொள்வார்கள். இது ஒருவர் வீழ்ந்தாலும் தாங்கி பிடித்து கொள்ளும், புதிதாக தொழில் தொடங்க வருவோருக்கு கை கொடுக்கும். குடும்பமாக தொழிலை கவனித்து கொள்வதன் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் குறைக்கிறார்கள்.
பெண்களுக்கு அதிகாரம்: மார்வாடி குடும்பங்களில் பெண்கள் அதிக அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டின் நிர்வாகமும் நிதி சார்ந்த முடிவுகளும் பெண்களின் கைகளில் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நிறைய தங்கத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். தொழில் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதிலும் மார்வாடி பெண்கள் முக்கியத்துவம் தருகின்றனர்.
வருமானத்தை மூலதனமாக கருதுவது, சிறந்த நம்பிக்கை மிகுந்த நெட்வொர்க்கை உருவாக்குவது, நிதி சார்ந்த விழிப்புணர்வு, பங்குகள் மூலம் பணத்தைப் பெருக்கி நிலம், தங்கத்தில் முதலீடு செய்வது , ஒரு குடும்பமாக இணைந்து தொழிலை மேற்கொள்வது, ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இவை அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது ஒழுக்கமாக பின்பற்றப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications