சமூக வலைத்தளங்கள் எங்கும் இந்த பங்கில் முதலீடு செய்தால் ஒரே மாதத்தில் பணம் கிடைக்கும், இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் பகிரப்படுகின்றன. பணத்தை முதலீடு செய்து விட்டு உடனடியாக பணக்காரனாகிவிட வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் செல்வம் சேர்க்க இது எதுவுமே தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள். உங்களுடைய வருமானம் எவ்வளவாக இருந்தாலும் சரி , நீங்கள் ஒரு சாதாரண வேலையில் இருந்தாலும் சரி இந்த ஒரு விஷயத்தை பின்பற்றினால் எளிதாக உங்களால் செல்வந்தனாக மாற முடியும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் சூரத்தை சேர்ந்த ஒரு நபர்.

பட்டய கணக்காளரான நிதின் கௌசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் அண்மையில் தனக்கு தெரிந்த ஒரு நபர் பெரிய வேலையில் இல்லாதவர் பெரிய சம்பளமும் இல்லை ஆனால் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தினை வாங்கி இருக்கிறார் என கூறியிருக்கிறார். அது எப்படி சாத்தியமானது என்பதையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
சூரத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வாங்கினார். அதில் 45 லட்சம் ரூபாய் அவர் சேமித்து வைத்திருந்த பணம் என கூறியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தன்னுடைய வருமானத்தில் தொடர்ச்சியாக பணத்தை சேமித்து 45 லட்சம் ரூபாய் வரை சேமித்து இருக்கிறார் என்றும் மீதமுள்ள 10 லட்சம் ரூபாய்க்கு தான் அவர் வங்கியில் கடன் வாங்கினார் என்றும் கூறியிருக்கிறார்.
ஒழுக்கமான முறையில் முதலீடு செய்வது, மிகச் சரியான திட்டமிடல் மற்றும் முதலீட்டை தொடர்வது ஆகிய மூன்றும் தான் இவருடைய வெற்றிக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார் . எந்த ஒரு சிக்கலும் இதில் கிடையாது எனக் கூறியிருக்கும் அவர் தன்னுடைய பணத்தை வங்கி டெபாசிட் மற்றும் தங்க சேமிப்பு திட்டங்கள் மற்றும் சிறு சிறு ரியல் எஸ்டேட்டுகளில் அவர் முதலீடு செய்தார் என்கிறார்.
முதலில் வீடு மற்றும் கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டார் அந்த வாடகை வருமானத்தை அவர் மற்ற முதலீடு திட்டங்களில் முதலீடு செய்தார். அவருக்கு அவருக்கு மாதம் தோறும் 22,000 வாடகை வருமானமாகவே கிடைக்கிறது என்றும் இந்த 12 ஆண்டுகளில் மற்ற முதலீடுகள் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து அவருக்கு மொத்தமாக 45 லட்சம் ரூபாய் வருமானம் தந்தது என்றும் தெரிவித்திருக்கும் அவர் இந்த பணத்தை கொண்டு சூரத்தில் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி இருக்கிறார் என கூறியுள்ளார்.
செல்வந்தனாக வேண்டும் என்பது அத்தனை சிக்கலானது அல்ல என குறிப்பிட்டு இருக்கும் நிதின் கௌசிக் சரியான திட்டமிடல், ஒழுக்கமான முதலீடு , காத்திருந்து ஆகியவை இருந்தால் பெரிய வேலையோ, சம்பளமோ இல்லாமலேயே உங்களால் செல்வம் சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications