நடப்பு நதியாண்டு முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உங்களது போர்ட்போலியோவினை சரியான முறையில் திட்டமிட இதுவே சரியான காலமாகும். குறிப்பாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், இது மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
முதலீட்டுடன் கூடிய வரி சலுகையுள்ள 5 முதலீட்டு திட்டங்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இவற்றில் சிலவற்றை ஏற்கனவே பலரும் அறிந்திருக்கலாம்.
பிபிஎஃப் (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் நீங்கள் அதிகபட்சமாக, நீங்கள் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகையினை பெற முடியும். இதனை நீங்கள் மாத மாதமோ அல்லது லம்ப்சம் தொகையாகவோ முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் தற்போது 7.1% வழங்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகள் (வரி சேமிப்பு)
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் வரி சேமிப்பு என்பது இல்லை. ஆனால் இஎல்எஸ்எஸ் (ELSS) திட்டத்தின் மூலம் வரி சலுகை பெற முடியும். இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ், 1.5 கீழ் வரிச் சலுகை பெற முடியும். எனினும் இந்த திட்டத்தில் லாக் இன் பீரியர்டு 3 ஆண்டுகள் ஆகும்.
நேஷனல் பென்சன் சிஸ்டம்
அரசு திட்டமான நேஷனல் பென்சன் சிஸ்டத்தில் 80CCD (1B) கீழ் வரி விலக்குகளுக்கு பொறுப்பாகும். இதன் மூலம் 1,50,000 ரூபாய் வரையில் வரி சலுகை கிடைக்கும். இது தவிர CCD (1B)யின் கீழ் 50,000 ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும். ஆக மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இது மக்களின் ஓய்வுகாலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
இன்றும் பல வகையான லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இது எதிர்பாராத சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம் வரி சலுகையினையும் இதன் மூலம் பெற முடியும்.உங்களுக்காகவும், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்காகவும் செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கான விலக்குகளை பெறலாம். உங்கள் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு விலக்கு இல்லை.
வருங்கால வைப்பு
பொதுவாக ஊழியர்களாக இருக்கும் பலரும் வரி சலுகை மற்றும் கூடுதல் வருமான வரி சலுகையும் பெற முடியும். இதில் வருமான வரி பிரிவு 80 சி பிரிவின் கீழ் வரி சலுகை பெற முடியும்.
இது தவிர சுகன்யா சம்ரிதி யோஜனா, ஈக்விட்டி லிங்கிட் சேவிங்க் திட்டம் மற்றும் பிக்ஸட் டெபாசிட் திட்டம் என பலவும் வரி சலுகை அளிக்கும் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
உள்கட்டமைப்புப் பத்திரம்
வருமான வரி செலுத்துவோர் பிரிவு 80CCF இன் கீழ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சேமிப்புப் பலன்களைப் பெறலாம். பிரிவு 80CCF இன் கீழ் விலக்கு பெறுவதற்கான அதிகபட்சத் தொகை ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கு ரூ.20,000 ஆகும். ஆக இதன் மூலமும் பலன் பெற முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு



Click it and Unblock the Notifications