Post office savings schemes: இன்றைய காலகட்டத்தில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் விருப்பமான பிரபலமான திட்டங்களாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று பாதுகாப்பு. நீண்டகால நோக்கில் நல்ல வருமானம் தரும் திட்டமாகவும் உள்ளது.
ஆக இதனால் லட்சக் கணக்கான நடுத்தர மக்கள் இந்த முதலீட்டு திட்டங்களை நாடுகின்றனர்.
அதோடு வாடிக்கையாளர்களுக்கு விரைவில் சேவையை அளிக்க நாடு முழுவதும் ஏராளமான அஞ்சலகங்கள் உள்ளன.
வரி சலுகை உண்டு
இது நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் உள்ளது. இது எல்லாவற்றுக்கு மேலாக வருமான வரி சலுகையாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகையினை 80சி பிரிவின் கீழ் பெற முடியும்.
இப்படி மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் வழங்கும் 5 முதலீட்டு திட்டங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட பிரத்தியேக திட்டம். இதில் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கிக் கொள்ள முடியும். அதிகபட்சம் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இதில் தற்போது 7.6% வட்டி விகிதம் கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகையும் உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி
அஞ்சலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி. இதில் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 7.1% வட்டி கிடைக்கிறது. இதன் முதிர்வுகாலம் 15 ஆண்டுகள் ஆகும். இதிலும் வரி சலுகை என்பது உண்டு. இந்த திட்டத்தில் உள்ள சிறந்த விஷயம் என்னவெனில் வேண்டுமெனில் மேலும் 5 ஆண்டு தொகுப்புகளாக தொடர்ந்து நீட்டித்துக் கொள்ள முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கான வழங்கப்படும் பிரத்யேக திட்டம் தான், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இது 5 ஆண்டு முதிர்வு திடமாகும். இதில் தற்போது வட்டி விகிதம் 8% ஆக வழங்கப்படுகிறது. இதிலும் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உண்டு. நிரந்தர வருமானம் தரும் திட்டமாகும். இதில் பயனாளர்கள் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம்
அஞ்சலகத்தில் உள்ள மற்றொரு பிரபலமான திட்டங்களில் ஒன்று தேசிய சேமிப்பு பத்திரம். இதில் மாதம் 1000 ரூபாய் குறைந்தபட்சமாக முதலீடு செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக 100-ன் மடங்கில் செய்து கொள்ளலாம். இங்கு அப்பர் லிமிட் கிடையாது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதில் தற்போதைய வட்டி விகிதம் 7% ஆகும். இதிலும் வரி சலுகை என்பது 1.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும்.
டைம் டெபாசிட்
அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் என்பது வங்கி டெபாசிட் திட்டங்களைபோல உள்ள திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச மாக 1000 ரூபாயில் இருந்து, எவ்வளவு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. இதன் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் வரையில் உள்ளது. இதிலும் வரி சலுகை என்பது கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications